எப்பொழுதும் அதிரடியாக செயல்பட மற்றவரை மூக்கின் மேல் விரல்வைத்து ஆசிரியப்படுத்த வைக்கும் உபி முதல்வர் யோகி தற்பொழுது திருமணத்திற்காக மட்டும் மதம் மாற்றுவது செல்லுபடியாகாது என்ற அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை குறிப்பிட்ட, உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ‘லவ் ஜிஹாத்தை’ தடுக்க அரசாங்கம் ஒரு சட்டத்தைக் கொண்டு வரும் என்று கூறினார்.
“திருமணத்திற்கு மத மாற்றம் தேவையில்லை என்று அலகாபாத் ஐகோர்ட் கூறியுள்ளது. ‘லவ் ஜிஹாத்’ ஐ கட்டுப்படுத்த அரசாங்கமும் செயல்படும், நாங்கள் ஒரு சட்டத்தை கொண்டுவருவோம். தங்கள் அடையாளத்தை மறைத்து, பெண்களை ஏமாற்றும் நபர்களை நான் எச்சரிக்கிறேன். நீங்கள் உங்களை திருத்திக் கொள்ளாவிட்டால், தண்டிக்கப்படுவீர்கள், ”என்று முதல்வர் யோகி கூறினார்.
காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதியினர், தங்கள் திருமண வாழ்க்கையில் மனைவியின் பெற்றோர் மற்றும் காவல்துறையினர் தலையிடக்கூடாது என்று உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று கோரி, அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். வெவ்வேறு மத்தைச் சேர்ந்த இந்த காதல் தம்பதியினர் கடந்த ஜூலை மாதம், பெற்றோரின் அனுமதியின்றி திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
2014 ஆம் ஆண்டில் நூர் ஜஹான் பேகம் வழக்கை விசாரணை செய்த உயர் நீதிமன்றம் திருமண நோக்கத்திற்காக மட்டுமே மதம் மாற்றுவது ஏற்றுக்கொள்ள முடியாதது என்று தீர்ப்பளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
அந்த வழக்கில், “இஸ்லாத்தைப் பற்றிய எந்த அறிவும் இல்லாமல் அல்லது இஸ்லாத்தின் மீதான நம்பிக்கை மற்றும் புரிதல் எதுமே இல்லாமல், திருமணத்தின் நோக்கத்திற்காக மட்டுமே மதம் மாற்றினால் அது செல்லுபடியாகுமா? அதை எப்படி ஏற்றுக் கொள்வது என நீதிமன்றம் கேள்வி எழுப்பி இருந்தது .
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















