உத்திர பிரேதசத்தில் ரவுண்டு கட்டும் யோகி ! தாதாக்களின் 1,128 கோடி மதிப்புள்ள சொத்துகள் பறிமுதல்! இது வேற லெவல் சிக்ஸர்! ரௌடிசம் பண்ண சொத்து இருக்காது!

எப்பொழுதும் அதிரடியாக செயல்பட்டு மற்றவரை மூக்கின் மேல் விரல் வைத்து ஆச்சர்யப்பட வைக்கும் முதல்வர் உ.பி முதல்வர் யோகி தான்! அதிரடி என்றாலும் சரவெடி என்றாலும் நடவடிக்கை என்றாலும் இவருக்கு தனி ஸ்டைல் உள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய மாநிலம் உத்திர பிரேதேசம் ஆகும் அங்கு சுமார் 20 கொடுக்கும் மேற்பட்ட மக்கள் வாழ்கின்றார்கள். யோகி ஆட்சி வந்தபிறகு மாநிலம் வளர்ச்சி பாதையில் சென்று கொண்டிருக்கின்றது . இதே போல் முன்பு ரவுடிகளின் கூடாரம் என அழைக்கப்பட்டது. தற்போது தொழிற்சாலைகளின் கூடாரம் என அழைக்கப்படும் போல. அது போல் ஆட்சி செய்து வருகிறார் யோகி.

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக உத்தர பிரதேசத்தில் நடந்த போராட்டத்தில் பொது சொத்துகள் சேதப்படுத்தப்பட்டன. சேதப்படுத்தியவர்களை கண்டறிந்து அவர்களுடைய சொத்துகளை பறிமுதல் செய்ய அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டார்.

ரவுடிகளை அடுக்குவதற்கு புதிய முறையை கையாள்கிறார். உத்திர பிரதேச முதல்வர் யோகி அவர்கள் இந்த அதிரடியில் உத்தரப் பிரதேசத்தில் தாதா கும்பல்களிடம் இருந்து ரூ.1,128 கோடி மதிப்புள்ள சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. உத்தர பிரதேசத்தில் தாதா கும்பல்கள் அதிகளவில் உள்ளன. மாவட்டங்களை பிரித்துக் கொண்டு, அரசுக்கு போட்டியாக இவர்கள் நிழல் ராஜ்ஜியம் நடத்தி வருகின்றனர். கடந்தாண்டு தன்னை பிடிக்க வந்த 8 போலீசாரை பிரபல தாதா விகாஷ் துபேசுட்டுக் கொன்றதை தொடர்ந்து, தாதா கும்பல்கள் மீதான அதிரடி நடவடிக்கையை முதல்வர் யோகி எடுத்து வருகின்றார்கள். துபேவை சுட்டுக் கொன்றது மட்டுமின்றி, அவன் குவித்து வைத்திருந்த பல நூறு கோடி சொத்துகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மற்ற தாதா கும்பல் தலைவன்களும் கைது செய்யப்பட்டு, அவர்களின் அசையும், அசையா சொத்துகளை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதன் மொத்த மதிப்பு ரூ.1,128 கோடி.

கடந்த 2020ம் ஆண்டு ஜனவரி முதல் கடந்த ஏப்ரல் வரை, இம்மாநிலத்தில் சட்ட விரோத கும்பல்கள் மீது 5,558 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில், 22,259 குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தாதாவாக இருந்து அரசியல்வாதியாக மாறிய முக்தர் அன்சாரி இப்போது பாண்டா சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறான். இவனுக்கு சொந்தமான ரூ.194 கோடி மதிப்புள்ள சொத்துக்களும், குஜராத் சிறையில் உள்ள தாதா அட்டீப் அகமதுவிடம் இருந்து ரூ.325 கோடி சொத்துக்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதேபோல், சோன்பத்ரா சிறையில் உள்ள சுந்தர்பாட்டியின் ரூ.63 கோடி மதிப்புள்ள சொத்துகளும், பாலியா சிறையில் உள்ள தாதா குந்து சிங்கின் ரூ.17 கோடி சொத்துக்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

Exit mobile version