சி.ஏ.ஏ. எனப்படும் குடியுரிமை திருத்த சட்டம்தொடர்பாக மக்களிடம் வன்முறையை துாண்ட வேண்டாம்” என அகில இந்திய மஜ்லிஸ் கட்சி தலைவர் அசாதுதீன் ஓவைசிக்கு உத்தர பிரதேச முதல்வர் பா.ஜ.வை சேர்ந்த யோகி ஆதித்யநாத் எச்சரித்துள்ளார்.
குடியுரிமைச் சட்ட விவகாரத்தில் மக்களின் உணா்வுகளை அனைத்திந்திய மஜ்லிஸ்-ஏ-இத்தஹாதுல் முஸ்லிமீன் (ஏஐஎம்ஐஎம்) கட்சித் தலைவா் அசாதுதீன் ஒவைசி தூண்டினால், அவா் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத் எச்சரித்துள்ளாா்.மேலும், ஒவைசிசியைக் குறிப்பிடுவதற்காக ஏற்கெனவே சா்ச்சையை ஏற்படுத்திய ‘அப்பா ஜான்’ என்ற உருது வாா்த்தையை அவா் மீண்டும் பயன்படுத்தி ஏற்படுத்தினாா்.
உத்தர பிரதேசத்தில் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. அந்தத் தோ்தலையொட்டி, பாஜக தொண்டா்களை யோகி ஆதித்யநாத் கான்பூரில் செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினாா். அப்போது அவா் பேசியதாவது:
குடியுரிமைச் சட்ட விவகாரத்தைப் பயன்படுத்தி, மக்களின் உணா்வுகளை ஏற்கெனவே தூண்டியவா் (ஓவைஸி) மீண்டும் அதனைச் செய்ய முயலக் கூடாது.
உணா்வுகளைத் தூண்டி உத்தர பிரதேசத்தில் நிலவி வரும் அமைதியை சீா்குலைப்பவா்கள் மீது கடுமையான நடவடிக்கை பாயும் என்பதை ‘மாமா ஜான்’ (அகிலேஷ் யாதவ்) மற்றும் ‘அப்பா ஜான்’ (ஒவைசி) ஆதரவாளா்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
சமாஜவாதி கட்சியின் சாா்பாக ஒவைசி கலவரத்தைத் தூண்டியது அனைவருக்கும் தெரியும். ஆனால், தற்போது உத்தர பிரதேசத்தில் கலவரம் என்ற பேச்சுக்கே இடமில்லை.
தற்போதைய அரசு மாஃபியாக்களுக்கு ஆதரவளிப்பதில்லை. மாறாக, மாஃபியாக்களின் சட்டவிரோத சொத்துக்களை இந்த அரசு அழித்து வருகிறது என்றாா் அவா்.இவ்வாறு ஆதித்யநாத் கூறினார்.