உத்தரப்பிரதேசத்தில் வருகின்ற 2022ஆம் ஆண்டு நடக்கவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி 300 க்கும் அதிகமான சட்டமன்ற தொகுதிகளை கைப்பற்றும் என அம்மாநில முதல்வர் யோகி ஆதித்தனார் தெரிவித்துள்ளார்.
உத்திரபிரதேசத்தில் நடந்த 75 மாவட்ட பஞ்சாயத்து தேர்தலில் 67 இடங்களில் பாஜக வெற்றி பெற்றதை தொடர்ந்து பிரதமர் மோடி மற்றும் அமித் ஷா ஆகியோர் வாழ்த்து தெரிவித்த நிலையில் வருகின்ற 20 22 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் 300 இடங்களுக்கு மேல் நிச்சயம் கைப்பற்றுவோம் .
என அதற்கான பணியினை பிரதமர் மோடி அமித்ஷா பாஜக தலைவர் ஆகியோர் வழிகாட்டுதலின் கீழ் கிடைத்த வெற்றி அதேபோல் வருகின்ற தேர்தலில் கட்டாயம் மிகப்பெரிய வெற்றி பெறுவோம் என தெரிவித்துள்ளார்.
2014ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் ,2016 சட்டப்பேரவைத் தேர்தல், 2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜக வென்றுள்ளது அதேபோல் 2002 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலிலும் பாஜக இமாலய வெற்றியை பெறும் எனவும்.
அந்த வெற்றி ஒரு சாதனை வெற்றியாக மக்களால் அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது ஏ ஐ எம் ஐ எம் கட்சியின் தலைவர் அசாசுதீன் ஓவைசி மிகப்பெரிய தலைவர் என்றால் வருகின்ற 2022ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் உத்திரபிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் அவரது கட்சி போட்டியிட்டால் அவருக்கு சவால் விட்டு கூறுகிறேன்.
அந்த கட்சியை மிகப்பெரிய தோல்வி அடையும் என யோகி அங்க கட்சியின் தலைவர் அசாதுதீன் ஓவைசிக்கு சவால் விடுக்கும் விதமாக யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார் .