கடந்த வாரம் அமித்ஷா அஜித்தோவல் உள்துறை செயளாலர் ரா தலைவர் ஐபி இயக்குனர் சி ஆர்பிஎப் தலைவர் ஜம்மு காஷ்மீர் டிஜிபி என்று மிக முக்கியமான தலைவர்கள் இணைந்து நடத்திய ஒரு ஆலோசனை கூட்டம் எதற்காக? ஜம்மு மாநிலம் என்கிற ஒரு அரசியல் நடவடிக்கைக்கு தானா? இல்லை வேறு ஏதாவது ராணுவநடவடிக்கைக்கு முந்தைய ஆலோசனையா ? என்பது தான் இரு நாட்களுக்கு முன் இந்தியாவை தலை சுற்ற வைத்த செய்தி ஆகும். அடுத்து பிரதமர் காஷ்மீர் உள்ள அரசியல் கட்சி தலைவர்களுடன் பேசுவார் என செய்தி வந்தது. மாநில அரசியல் நடவடிக்கைக்கு இவ்வளவு பெரிய முக்கியத்துவம் தேவையில்லை ஏனென்றால் ஜம்மு காஷ்மீரில் எந்த ஒரு அரசியல் நடவடிக்கை எடுக்கப்பட்டாலும் இனி அதை எதிர்த்து மிகப்பெரிய அளவில் போராட்டங்கள் எழாத வண்ணம் பிரிவினைவாதிகள் அடங்கி வாழ பழகி விட்டார்கள்.
ஜம்மு – காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து 2019 ஆகஸ்டில் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து ஜம்மு – காஷ்மீர், லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப் பட்டன.இந்த நடவடிக்கைக்கு பின் முதல்முறையாக, ஜம்மு – காஷ்மீரைச் சேர்ந்த அரசியல் கட்சி தலைவர்களுடன் ஆலோசனை நடத்த மத்திய அரசு திட்டமிட்டது.
இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் காஷ்மீரைச் சேர்ந்த அரசியல் கட்சி தலைவர்களுடன் நேற்று உயர்மட்ட கூட்டம் மூன்றரை மணி நேரம் நடந்தது. இந்த கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், துணை நிலை கவர்னர் மனோஜ் சின்ஹா, பிரதமர் அலுவலக இணை அமைச்சர் ஜிதேந்திரா சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஜம்மு – காஷ்மீருக்கு மாநில அந்தஸ்தை திரும்ப அளிக்க வேண்டும் என, அனைத்து கட்சி தலைவர்களும் கோரிக்கை வைத்தனர்அனைவரின் கோரிக்கைகளையும் பிரதமர் கவனமாக கேட்டுக் கொண்டார்.ஜம்மு – காஷ்மீரில் சட்ட சபை தேர்தல் நடத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது. ‘அங்கு, தொகுதி வரையறை பணிகள் முடிவடைந்ததும் விரைவில் தேர்தல் நடத்தப்படும்’ என உறுதி அளித்ததாக காஷ்மீர் மாநில அரசியல் கட்சி தலைவர்கள் தெரிவித்தார்கள்.
ஜம்மு காஷ்மீர் தொடர்பான பிரதமரின் அனைத்துக் கட்சி கூட்டம் குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடுகையில், “ஜம்மு-காஷ்மீரின் அனைத்து வளர்ச்சியையும் உறுதி செய்ய நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். ஜம்மு-காஷ்மீரின் எதிர்காலம் விவாதிக்கப்பட்டது. நாடாளுமன்றத்தில் வாக்குறுதியளித்தபடி மாநிலத்தை மீட்டெடுப்பதில் டிலிமிட்டேஷன் பயிற்சி மற்றும் அமைதியான தேர்தல்கள் முக்கியமான மைல்கற்கள்” என்று தெரிவித்துள்ளார்.
ஜம்மு&காஷ்மீரின் ஒட்டுமொத்த வளர்ச்சி மேம்பட்டு வரும் நிலையில், வளர்ச்சியடைந்த மற்றும் முன்னேறிய ஜம்மு&காஷ்மீரை நோக்கி எடுக்கப்பட்டு வரும் முயற்சிகளில் முக்கிய நடவடிக்கையாக ஜம்மு&காஷ்மீரை சேர்ந்த அரசியல் தலைவர்களுடனான இன்றைய கூட்டம் அமைந்தது என்று பிரதமர் திரு நரேந்திர மோடி கூறினார்.
இது குறித்து தமது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர், “ஜம்மு&காஷ்மீரின் ஒட்டுமொத்த வளர்ச்சி மேம்பட்டு வரும் நிலையில், வளர்ச்சியடைந்த மற்றும் முன்னேறிய ஜம்மு&காஷ்மீரை நோக்கி எடுக்கப்பட்டு வரும் முயற்சிகளில் முக்கிய நடவடிக்கையாக ஜம்மு&காஷ்மீரை சேர்ந்த அரசியல் தலைவர்களுடனான இன்றைய கூட்டம் அமைந்தது.
ஜம்மு&காஷ்மீரில் அடித்தட்டு ஜனநாயகத்தை வலுப்படுத்துவதே நமது முன்னுரிமை ஆகும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு ஜம்மு&காஷ்மீரில் அமைந்து ஜம்மு&காஷ்மீரின் வளர்ச்சி பயணத்திற்கு வலுவூட்ட தொகுதி மறுசீரமைப்பு பணிகள் விரைந்து நடைபெற வேண்டும்.
கூட்டத்தில் ஒன்றாக அமர்ந்து கருத்துகளை பரிமாறிக் கொள்வது நமது ஜனநாயகத்தின் மிகப்பெரிய வலிமை ஆகும். மக்கள், குறிப்பாக இளைஞர்கள் தான் ஜம்மு&காஷ்மீரின் அரசியல் தலைமையாக இருக்க வேண்டும் என்றும், அவர்களது எண்ணங்கள் ஈடேறுவதை உறுதி செய்யுமாறும் ஜம்மு&காஷ்மீரை சேர்ந்த அரசியல் தலைவர்களிடம் நான் கூறினேன்,” என்று பிரதமர் கூறியுள்ளார்.
இளைஞர்கள் தான் ஜம்மு&காஷ்மீரின் அரசியல் தலைமையாக இருக்க வேண்டும்என கூறியதால் அனைத்து கட்சிகளும் பிரதமர் யாரை குறிப்பிட்டு சொல்கிறார் என ஆலோசனையில் ஈடுபட்டதாக தெரிகிறது. அவர் கூறியதில் ராணுவத்தில் இருந்து யாராவது ஜம்மு காஷ்மீர் அரசியலில் ஈடுபடுவார்களா அல்லது பிரதமரின் இந்த ட்வீட் போட்டதற்கு எதாவது சூட்சமம் இருக்கிறதா இல்லை எதார்த்தமாக ட்வீட் செய்தாரா என்பது மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















