ராஜஸ்தானில் 25ம் தேதி நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை முன்னிட்டு பா.ஜ., வேட்பாளர்களை ஆதரித்து துங்கர்பூரில் பிரதமர் மோடி பிரசாரம் மேற்கொண்டார். பொதுக்கூட்டத்தில் மோடி பேசியதாவது: காங்கிரஸின் மோசமான ஆட்சியால் இளைஞர்களின் கனவுகள் சிதைந்துவிட்டன. ராஜஸ்தானில் உள்ள காங்கிரஸ் அரசு அனைத்து அரசு பணி நியமனங்களிலும் ஊழல் செய்துள்ளது. உங்கள் குழந்தைகளுக்கு அநீதியை பெற்று தந்துள்ளது.
இந்த மோசமான காங்கிரஸ் அரசை மாற்ற ஜனநாயகம் உங்களுக்கு வாய்ப்பளித்துள்ளது. சில சமயங்களில் ஒரு சிறு தவறும் உங்களை ஐந்தாண்டுகள் துன்பத்தில் ஆழ்த்தலாம். மத்திய அரசின் அனைத்து திட்டங்களையும் வேகமாக செயல்படுத்த ராஜஸ்தானில் காங்கிரசை விரட்டுவது முக்கியம்.
நம் நாட்டில் கோடிக்கணக்கான ஆதிவாசிகளுக்கு காங்கிரஸ் ஒருபோதும் உதவியதில்லை. அவர்களுக்கென்று தனி அமைச்சகத்தை உருவாக்கி, ஆதிவாசிகளின் நலனுக்கான பட்ஜெட்டை அதிகப்படுத்தியது பா.ஜ.,. ராஜஸ்தானில் பா.ஜ., ஆட்சி அமைந்தவுடன் பெட்ரோல், டீசல் விலையை மறுஆய்வு செய்து மக்கள் நலனுக்கான முடிவுகள் எடுக்கப்படும். ராஜஸ்தானில் அரசு அதிகாரிகளை காங்கிரஸ் ஏமாற்றியுள்ளது. என இவ்வாறு மோடி பேசினார்.