விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் போதை மாத்திரைகள், கஞ்சா அமோகமாக விற்பனை செய்யப்படுவதாக விழுப்புரம் கூடுதல் காவல் கண்காணிப்பாளருக்கு ரவீந்திர குமார் குப்தாவிற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை அடுத்து, அவரது தனிப்படை போலீசார், அரகண்டநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் திடீரென சோதனை மேற்கொண்டனர்.
அப்போது மனம்பூண்டி நான்கு சாலை சந்திப்பில் சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த இரண்டு இளைஞர்கள் பிடித்து சோதனை செய்தனர். சோதனையின் போது அவர்களிடம் நான்கு போதை மாத்திரைகள், ஐந்து ஊசிகள் இருந்துள்ளது.
இதனை அடுத்து இருவரையும் அரகண்டநல்லூர் காவல் நிலையத்தில் தனிப்படை போலீசார் ஒப்படைத்துள்ளனர்.
அரகண்டநல்லூர் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் மணிகண்டன், சிவப்பிரகாசம் ஆகிய இருவரும் விழுப்புரம் மாவட்டம் மணம்பூண்டி பகுதியை சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களை சிறையில் அடைத்தனர்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















