ரூ.3000 கோடி மதிப்பிலான போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் தலைமறைவாக இருந்த திமுக முன்னாள் நிர்வாகியும் போதைப்பொருள் கடத்தல் மன்னன் ஜாபர் சாதிக்கை மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் டில்லியில் அதிரடியாக கைதுசெய்துள்ளார்கள்.
ஜாபர் சாதிக் மற்றும் அவனது கூட்டாளிகள் டில்லியில் தங்கி, உணவு பொருட்கள் போல, வெளிநாடுகளுக்கு ‘ மெத்தாம்பெட்டமைன்’ எனப்படும் போதைப் பொருள் தயாரிக்க பயன்படுத்தும் ‘ சூடோபெட்ரின்’ வேதிப்பொருளை கடத்தி வந்துள்ளார்கள். இந்த நிலையில் தேசிய போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் கடந்த பிப்ரவரி மாதம் 15 ஆம் தேதி டெல்லியில் நடத்திய அதிரடி சோதனையில் கடத்தலில் ஈடுபட்ட சென்னையைச் சேர்ந்த முகேஷ், முஜிபுர் ரஹ்மான், விழுப்புரத்தைச் சேர்ந்த அசோக் குமார் ஆகியோர் பிப்ரவரி 15 ஆம் தேதி டெல்லியில் கைது செய்யப்பட்டனர்.
இவர்களிடம் சுமார் 75 கோடி ரூபாய் சூடோபெட்ரின் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. மேலும் கடந்த 3 வருடங்களில் 15000 கோடி ரூபாய்க்கு போதை பொருள் கடத்தல் நடந்துள்ளது தீவிர விசாரணையில் தெரியவந்தது. மேலும் போதை பொருள் கடத்தலுக்கு தலைவனாக ஜாபர் சாதிக் என்பது தெரியவந்தது இவர் தி.மு.க.வில் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளராக இருந்துள்ளார். கடத்தல் விவகாரம் தெரிந்ததும் ஜாபர் சாதிக் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
டில்லியில் உள்ள மத்திய போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என சென்னையில் உள்ள ஜாபர் சாதிக் வீட்டில் சம்மன் நோட்டீஸ் ஒட்டப்பட்டது. ஆனால் ஜாபர் சாதிக் சகோதரர்கள் மற்றும் குடும்பத்தாருடன் தலைமறைவானார். அவர் வெளிநாட்டிற்கு தப்பி செல்லாமல் இருக்க லுக் அவுட் நோட்டீஸை மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கொடுத்தனர். அவரது வங்கிக்கணக்குகளும் முடக்கப்பட்டது. இந்நிலையில், இரண்டு வாரத்திற்கும் மேலாக தலைமறைவாக இருந்த ஜாபர் சாதிக்கை மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் டில்லியில் கைது செய்துள்ளார்கள்
கடத்தல் மன்னன் ஜாபர் சாதிக் கைதை தொடர்ந்து மத்திய போதை மருந்து தடுப்பு பிரிவு அதிகாரி ஞானேஸ்வர் சிங் கூறுகையில் போதைப்பொருள் கடத்தலை தடுக்க முழு வீச்சில் நடவடிக்கை எடுத்துள்ளோம். திருவனந்தபுரம், மும்பை, ஜெய்ப்பூர் ஆகிய இடங்களில் பதுங்கி இருந்துள்ளார். பங்களா ஒன்றில் பதுங்கியிருந்த ஜாபர் சாதிக்கை டில்லியில் கைது செய்தோம்.
ஜாபர் சர்வதேச போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்துள்ளார். டில்லி மற்றும் தமிழகம் உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் மலேசியாவுக்கு ஜாபர் சாதிக் கடத்தி வந்தார். உணவுப்பொருள் ஏற்றுமதி என்ற பெயரில் போதைப்பொருட்களை பல்வேறு நாடுகளுக்கு ஜாபர் சாதிக் கடத்தி உள்ளார்.3,500 கிலோ வரையிலான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு சம்பாதித்த பணத்தை சினிமா, ரியல் எஸ்டேட், கட்டுமானத்துறையில் ஜாபர் சாதிக் முதலீடு செய்துள்ளார். போதைப் பொருள் சம்பந்தப்பட்ட பணம் எங்கெங்கு முதலீடு செய்யப்பட்டதோ அது குறித்து விசாரிக்கப்படும். ஜாபர் சாதிக்கிற்கு முக்கிய பிரமுகர்கள் பலருடன் தொடர்பு உள்ளது. அரசியல் கட்சிகளுக்கு போதைப்பொருட்கள் கடத்தல் மூலம் சம்பாதித்த பணத்தை வழங்கி உள்ளார். மங்கை என்ற பெயரில் தமிழ் திரைப்படம் ஒன்றை ஜாபர் சாதிக் தயாரித்துள்ளார். சென்னையில் ஓட்டல் ஒன்றை ஆரம்பித்துள்ளார். தமிழகத்தில் சில திரைப்பிரபலங்கள் உடன் தொடர்பு இருப்பதாக ஜாபர் சாதிக் வாக்குமூலம் அளித்துள்ளார். விசாரணைக்குப்பின் ஜாபருடன் தொடர்புடையவர்கள் பெயர்களை வெளியிடுவோம் என்றார்.
மேலும் ஜாபர் சாதிக் மற்றும் அவரின் தம்பிகள் வங்கி கணக்கிலிருந்து ஐ.எஸ்.பயங்கரவாத அமைப்புக்கு ஆட்களை சேர்க்க, நிதியுதவி செய்ததாக கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்து என்.ஐ.ஏ., எனப்படும், தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
ஐ.எஸ்.பயங்கரவாத அமைப்புக்கு ஆட்களை சேர்க்க, மூவரும் நிதியுதவி செய்ததாக கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்து என்.ஐ.ஏ., எனப்படும், தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இது குறித்து என்.ஐ.ஏ அமைப்பு அதிகாரி ஒரு அதிர்ச்சி தகவலை தந்தார் கடந்த ஆண்டு கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில் முன், 2022ல், குண்டு வெடிப்பு நடத்திய, ஐ.எஸ்.பயங்கரவாதி ஜமேஷா முபின் பலியானார். இவரது தலைமையில், 12-க்கும் மேற்பட்டோர் தற்கொலை படையினராக மாறி தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருந்தனர்.இந்த குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக, தமிழகம் முழுவதும் பல கட்டங்களாக சந்தேக நபர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சோதனை செய்யப்பட்டது.
அப்போது சிக்கிய ஆவணங்களை ஆய்வு செய்ததில், மூளைச்சலவை செய்யப்பட்ட வாலிபர்களுக்கு, சென்னை, கோவையில் உள்ள அரபிக்கல்லுாரியில் பயங்கரவாத பயிற்சி அளிக்கப்பட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக, அரபிக் கல்லுாரிகளின் பேராசிரியர், முன்னாள் மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களின் வங்கி கணக்கை ஆய்வு செய்வதில், சில பண பரிவர்த்தனைகள் எங்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தின. அதுபற்றிய விபரத்தை, டில்லியைச் சேர்ந்த மத்திய போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்தோம்.
அவர்கள் தற்போது போதை பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள திமுக முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக், அவரது சகோதரர்கள் முகமது சலீம், மைதீன் ஆகியோரின் வங்கி கணக்குளை ஆய்வு செய்து, பண பரிவர்த்தனை குறித்து நாங்கள் கொடுத்த தகவல்களுடன் ஒப்பிட்டு பார்த்துள்ளனர். அதில், ஜாபர் சாதிக் மற்றும் அவரது சகோதரர்கள் அரபிக்கல்லுாரி பேராசியர் மற்றும் முன்னாள் மாணவர்கள் வாயிலாக, ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புக்கு ஆட்களை சேர்க்க, ஆயுத பயிற்சி அளிக்க நிதியுதவி செய்து இருப்பது தெரியவந்துள்ளது. என்றார். எனவே விவகாரம் பெரிதாகி கொண்டே போவதால் தமிழகத்தில் மிப்பெரிய அரசியல் மாற்றமே நடைபெறும் என அரசியல் நிபுணர்கள் தெரிவித்து வருகின்றார்கள். முதல்வர் முக ஸ்டாலின் உதயநிதி உதயநிதி மனைவி கிருத்திகா உதயநிதி என அணைத்து முக்கிய தலைகளுடன் தொடர்பில் இருப்பது போல் கடத்தல் மன்னன் ஜாபர் சாதிக் போட்டோ எடுத்து கொண்டுள்ளார். என்பது குறிப்பிடத்தக்கது.