இந்துமக்களின் எதிர்ப்பு காட் மேன் டீசரை நீக்கியது ஜீ தொலைக்காட்சி.!

இந்துமக்களின் எதிர்ப்பு காட் மேன் டீசரை நீக்கியது ஜீ தமிழ்.!குரல் கொடுத்த அத்தனை நண்பர்களுக்கும் நன்றி.தொடர்ந்து இந்து மதத்தை அவமதிக்கும் காட்சிகள் சினிமாவில் அரங்கேறியது. தற்போது சினிமாவிற்கு அடுத்த தளமான வெப்சீரிஸிலும் தலைதூக்க தொடங்கி உள்ளது. தனியார் தொலைக்காட்சியின் ஓடிடி தளமான ஜீ 5 ல் வெளியாகி உள்ள ‘காட்மேன்’ டீசரில் இடம் பெற்றுள்ள காட்சிகளும், வசனங்களும் இந்து மதத்தையும், பிராமண சமூகத்தை அவமதிக்கும் வகையில் இருப்பது இந்துக்களிடையே மன உளைச்சளையும் சர்ச்சையையும் ஏற்படுத்தி உள்ளது.

சினிமாவிற்கு தணிக்கை உள்ளது. ஆனால் இந்த வெப்தொடர்களுக்கு தணிக்கை இல்லாததால் படைப்பாளிகள் தங்களின் படைப்பு சுதந்திரம் என்ற பெயரில் ஆபாச காட்சிகளையும், வன்முறை காட்சிகளையும் வலிய புகுத்தி வந்தனர். இப்போது மத ரீதியான சர்ச்சைகளையும் கையில் எடுக்க தொடங்கிவிட்டனர். தொலைக்காட்சி நிறுவனங்களின் முக்கிய பொறுப்புகளில் கம்யூனிஸ்ட் மற்றும் இந்து மதத்தினை எதிர்ப்பவர்கள் தான் அதிகம் உள்ளார்கள். அவர்களால் தான் இந்து மதத்தை அவமதிக்கும் காட்சிகள் இடம் பெறுவதற்கு காரணம் ஆகும்.

இப்போது வெளியாகி உள்ள டீசருக்கே எதிர்ப்புகள் கிளம்ப ஆரம்பித்துவிட்டன. ஆன்மிகவாதிகள்
மற்றும் இந்து அமைப்புகள் டீசருக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றார்கள். மேலும் தொலைக்காட்சி நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்தார்கள். மேலும் அந்த தொலைக்காட்சி நிறுவனம் சென்று நேரடியாக இந்த டீசரை நீக்குமாறு கேட்டு கொண்டார்கள். தீவிர எதிர்ப்பு காரணமாக இப்போது வெளியாகி உள்ள டீசரை நீக்கியுள்ளது அந்த நிறுவனம். இது மேலும் இந்து மக்களின் ஒற்றுமைக்கு கிடைத்த வெற்றி.

Exit mobile version