எனக்கு காது கேக்காது… பத்திகையாளர்களிடம் அமைச்சர் சேகர்பாபு சைகை!

ஆ. ராசா குறித்து பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விக்கு எனக்கு காது கேக்காது என்பது போல அமைச்சர் சேகர் பாபு சைகை காட்டிய சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

தி.மு.க.வின் மூத்த ஆபாச பேச்சாளர்களில் ஒருவராக இருப்பவர் ஆ.ராசா. இவரது, கருத்துக்கள் அனைத்தும் ஹிந்துக்களை புண்படுத்தும் வகையிலேயே இருக்கும். அந்த வகையில், ஆ.ராசா கலந்து கொண்ட நிகழ்ச்சியில், ஹிந்துவாக இருக்கும் வரை நீ சூத்திரன். சூத்திரனாக இருக்கும் வரை நீ விபச்சாரியின் மகன். ஹிந்துவாக இருக்கும் வரை நீ பஞ்சமன். ஹிந்துவாக, இருக்கும் வரை நீ தீண்ட தகாதவன். எத்தனை, பேர் விபச்சாரியின் மகனாக இருக்க விரும்புகிறீர்கள்? என அருவருக்க தக்க வகையில் பேசி இருந்தார்.

தொடர் மின்வெட்டு, பால்விலை உயர்வு, சொத்து வரி உயர்வு, பஸ் கட்டண உயர்வு என விடியல் அரசு தமிழக மக்களை தொடர்ந்து வாட்டி வதைத்து வருகிறது. இப்படிப்பட்ட சூழலில், மின் கட்டணத்தை அண்மையில் தி.மு.க. அரசு உயர்த்தி இருந்தது. இதனால், கடும் கோவமடைந்த பொதுமக்கள் தி.மு.க. அரசிற்கு எதிராக கருத்து தெரிவிக்க துவங்கி இருக்கின்றனர். இதனை சமாளிக்கும் விதமாகவும், மக்களின் கவனத்தை திசை திருப்பும் வகையில், ஆ. ராசாவை தி.மு.க மேலிடம் தூண்டி விட்டு இருக்கிறது என்பதே பலரின் கருத்து கருத்து.

இப்படிப்பட்ட சூழலில், ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது, தி.மு.க.வின் மூத்த ஆபாச பேச்சாளர் ஆ. ராசா குறித்த கேள்வி அவர் முன் வைக்கப்பட்டது. அமைச்சர் என்ற முறையில் பதில் அளிக்க வேண்டிய அவர், எனக்கு காது கேக்காது என சைகை மூலம் பதில் அளித்த சம்பவம் ஹிந்துக்கள் மத்தியில் மீண்டும் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

பாம்புக்கு காது கேட்காது, அதுபோல சினேக் பாபுவாகிய எனக்கும் காது கேட்காது என்று அமைச்சர் சேகர் பாபு பத்திரிகையாளர்கள் முன்பு சைகை மூலம் சுட்டிக்காட்டி இருக்கிறார். இதில், என்ன தவறு இருக்கிறது. பாவம் யாரும் அவரை விமர்சனம் செய்ய வேண்டாம் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

நன்றி :- மீடியான்

FacebookTwitterWhatsAppMessengerTelegramWeChatLineShare
Exit mobile version