Wednesday, April 22, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home செய்திகள்

சிறார் கூர்நோக்கு இல்லங்களை ஆய்வு செய்யுங்கள் ! வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ வலியுறுத்தல் !

Oredesam by Oredesam
May 2, 2023
in செய்திகள், தமிழகம்
0
சிறார் கூர்நோக்கு இல்லங்களை ஆய்வு செய்யுங்கள் ! வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ வலியுறுத்தல் !
FacebookTwitterWhatsappTelegram
தமிழகத்தில் உள்ள சிறார் கூர்நோக்கு இல்லங்கள் சிறப்பாகவும், பாதுகாப்பாகவும் செயல்படுவதை முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி செய்ய வேண்டும் என பா.ஜ.க எம்.எல்.ஏவும் தேசிய மகளிர் அணி தலைவருமான  வானதி சீனிவாசன் அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது ; 

    தண்டனைக்குரிய குற்றங்களில் ஈடுபடும் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளை, தங்க வைப்பதற்காக உருவாக்கப்பட்டதே, சிறார் கூர்நோக்கு இல்லங்கள். மாவட்ட அளவில் உள்ள இந்த கூர்நோக்கு இல்லங்கள், மாநில அரசின் சமூகப் பாதுகாப்பு துறையின்கீழ் செயல்படுகின்றன. 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் பெரும்பாலும் அவர்கள் வளரும் சூழ்நிலையால்தான் குற்றங்கள் செய்யும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். எனவே, அவர்களை தனியாக தங்க வைத்து, மனதை நல்வழியில் செலுத்த பயிற்சி தருவதே சிறார் கூர்நோக்கு இல்லங்களின் நோக்கம். ஆனால், தமிழகத்தில் உள்ள சிறார் கூர்நோக்கு இல்லங்களில் இருந்து, சிறார்கள் தப்பிச் செல்லும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்கின்றன.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு திருநெல்வேலி சிறார் கூர்நோக்கு இல்லத்தில் இருந்து 12 சிறுவர்கள் தப்பிச் சென்றுள்ளனர். சீர்திருத்தப் பள்ளியாக செயல்பட வேண்டிய கூர்நோக்கு இல்லங்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பானதாக இல்லை என்றும், சுகாதாரமற்ற சூழ்நிலை இருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இப்படி குழந்தைகள் வாழ முடியாத அளவுக்கு மோசமான சூழல் இருப்பதால்தான் சிறார்கள் தப்பிச் செல்லும் சம்பவங்கள் நடப்பதாகவும் தகவல்கள் வருகின்றன. முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும், அமைச்சர்களும் சிறார் கூர்நோக்கு இல்லங்களை அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும். சுகாதாரமான, சத்தான உணவு, போதிய இட வசதி தேவையான உடைகள், சுத்தமான கழிவறைகள், குளியல் வசதி, யோகா, உடற் பயிற்சி செய்வதற்கான ஏற்பாடுகள் என அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.

கூர்நோக்கு இல்லங்களில் பொறுப்பாளராக இருக்கும் அதிகாரிகள், கண்டிப்பானவராக மட்டுமல்லாமல், குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு செயல்படும் கனிவானவராகவும் இருக்க வேண்டும் அப்படிப்பட்டவர்களை மட்டுமே கூர்நோக்கு இல்லங்களில் நியமிக்க வேண்டும். ஏனெனில், குழந்தைகள்தான் நம் நாட்டின் எதிர்காலம். அவர்கள் தான் நாட்டின் செல்வங்கள். இதனை பிரதமர் மோடி அடிக்கடி வலியுறுத்தி விடுகிறார். குழந்தைகளுக்கான சிறப்பு திட்டங்களையும் மத்திய பாஜக அரசு செயல்படுத்தி வருகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு கவனம் செலுத்தி தமிழகத்தில் உள்ள சிறார் கூர்நோக்கு இல்லங்கள் சிறப்பாகவும், பாதுகாப்பாகவும் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

READ ALSO

போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!

வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

சிறார் கூர்நோக்கு இல்லங்களை ஆய்வு செய்யுங்கள் ! வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ வலியுறுத்தல்!!

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி சொன்ன முக்கிய வார்த்தை.
செய்திகள்

போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!

March 5, 2026
வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.
இந்தியா

February 20, 2026
Annamalai
செய்திகள்

பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.

February 4, 2026
மோடி
உலகம்

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

January 20, 2026
தெலுங்கானாவில் கால் பாதிக்கும் பா.ஜ.க! தென்னிந்தியாவை நோக்கி படையெடுக்கும் பா.ஜ.க !
செய்திகள்

“திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”

January 20, 2026
IND vs US
இந்தியா

டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி

January 20, 2026

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

life Style

இந்த விதைகளை ஊற வைத்து குடியுங்கள் , டாக்டர் பக்கமே போக வேணாம்…. செலவே இல்லை…

August 22, 2024
bjp tamilnadu

கோவையில் அண்ணாமலை!. பொள்ளாச்சியில் குஷ்பு… தமிழக பா.ஜ.கவின் அடுத்தடுத்த மெகா ட்விஸ்ட்…

March 11, 2024
உதயநிதி சொன்ன நீட் தேர்வு ரகசியம் எங்கே! திமுகவை சம்பவம் செய்த வானதி சீனிவாசன் MLA

செந்தில்பாலாஜி மீது ஊழல் குற்றச்சாட்டை சுமத்திய ஸ்டாலின் பாராட்டி வரவேற்பது வெட்கக்கேடு வானதி !

September 27, 2024
oredesam

மின்சாரத்துறையின் ஊழல் ஆதாரத்தை வெளியிட்டார் அண்ணாமலை ! செந்தில் பாலாஜிக்கு செக் வைத்த அண்ணாமலை!

October 20, 2021

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • நியூஸ் தமிழ் தொலைகாட்சி நெறியாளரை அடித்து உதைத்த திமுகவினர் அண்ணாமலை கண்டனம்.
  • படிப்பை மட்டும் விட்றவே விட்றாதீங்க… ஆசிரியர்களையே நியமிக்காமல் தேவாவும், ஜீவாவும் எப்படிப் படிப்பார்கள் முதலமைச்சரே?-அன்புமணி கேள்வி.
  • BREAKING || த.வெ.க-வின் தேர்தல் வாக்குறுதிகள்.. அனல் பறக்க அறிவித்தார் விஜய்..!
  • போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x