பிரதமர் கரீம் கல்யாண் யோஜனா திட்டத்தின் கீழ் மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் உள்ள 13.4 கோடி பயனாளிகளுக்கு 1.78 லட்சம் மெட்ரிக் டன் பருப்பு வகைகள் விநியோகிக்கப்பட்டன.

பிரதமர் கரீப் கல்யாண் யோஜனா (PM GKY) திட்டத்துக்கு 4.57 லட்சம் மெட்ரிக் டன் பருப்புவகைகள், மாநிலங்கள் யூனியன் பிரதேசங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதில் 1.78 லட்சம் பருப்புவகைகள் மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் உள்ள 1340 .61 லட்சம் பயனாளிகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது.

2020- 21 ஆம் ஆண்டுக்கான ரபி சந்தைப்படுத்தும் பருவத்தில், இந்திய உணவுக்கழகத்திற்கு மொத்தம் 359.10 லட்சம் மெட்ரிக் டன் கோதுமை வந்து சேர்ந்தது. இதில் 347.54 லட்சம் மெட்ரிக் டன் வாங்கப்பட்டு விட்டது.

பிரதமர்கிசான் சம்மான் நிதி(PM-KISAN)  திட்டத்தின் கீழ் பொதுமுடக்கக் காலத்தின் போது 24. 3. 2020 அன்று முதல் இன்று வரை 9.67 கோடி விவசாயிகள் பயனடைந்துள்ளனர். இதுவரை 19,350.84 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளது

FacebookTwitterWhatsAppMessengerTelegramWeChatLineShare
Exit mobile version