இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. எனினும், பல மாநிலங்களில் போதிய அளவுக்கு தடுப்பூசிகள் இல்லை என கூறப்படுகிறது. ஆனால் அனைத்து மாநிலங்களிலும் தடுப்பூசி போதுமான அளவு கையிருப்பில் உள்ளது என தெரிவித்துள்ளது மத்திய அரசுநேற்று 7 மணி அளவில் வெளியான தற்காலிக அறிக்கையின் படி, 30.72 கோடிக்கும் (30,72,46,600) அதிகமான தடுப்பூசிகளை நாடு இதுவரை செலுத்தி உள்ளது.
ஜூன் 21-ல் இருந்து அனைவருக்கும்இலவசமாக தடுப்பூசி செலுத்தி வருகிறது மத்திய அரசு நேற்று மட்டும் 54.07 லட்சம் (54,07,060) தடுப்பூசி டோஸ்கள்போடப்பட்டுள்ளது. 18-44 வயது பிரிவில் 35,44,209 பயனாளிகள் தங்களது முதல் டோஸ் தடுப்பூசியையும், 67,627 பயனாளிகள் தங்களது இரண்டாவது டோசையும் இன்று பெற்றனர், 37 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் இருக்கும் 7,43,45,835 பேர் முதல் டோசையும், 15,70,839 நபர்கள் இரண்டாம் டோசையும் மூன்றாம் கட்ட தடுப்பூசி போட்டுள்ளார்கள்.
தமிழ்நாட்டில் மட்டும் 4275722 பேர் முதல் டோஸ் தடுப்பூசியையும், 37476 நபர்கள் இரண்டாம் டோசையும் இது வரை செலுத்திக் கொண்டுள்ளனர். புதுச்சேரியில் 154601 பேர் முதல் டோஸ் தடுப்பூசியை இது வரை செலுத்திக் கொண்டுள்ளனர்.
இந்நிலையில், மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களிடம் இன்னும் 1.89 கோடி டோஸ் தடுப்பூச் டோஸ்கள் பயன்படுத்தப்படாமல் இருப்பதாக மத்திய சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.இதுபோக இன்னும் மூன்று தினங்களில் மாநிலங்களுக்கு 21,05,010 தடுப்பூசி டோஸ்கள் கிடைக்கும் எனவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது