10 லட்சம் ரெம்டெசிவிர் மருந்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு வழங்கியது மத்திய அரசு!

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை மிக தீவிரமாக பரவி வருகிறது நாள் ஒன்றுக்கு 3 லட்சம் பேர் வரை பாதிப்புக்கு உள்ளாகிறார்கள்.

உயிரிழப்பும் சற்று அதிமாகி வருகிறது. டெல்லி மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் கொரோனா பரவல் மிக தீவிரம் அடைந்துள்ளது. கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், கொரோனா தடுப்பூசிப் போடும் பணிகள் ஆகியவற்றை மத்திய, மாநில அரசுகள் முடுக்கிவிட்டுள்ளன.

கொரோனாவுக்கான எதிரான சிகிச்சையில் ரெம்டெசிவிர் மருந்து மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த மருந்துக்குப் பல்வேறு மாநிலங்களில் தட்டுப்பாடு ஏற்பட்டதாகக் கூறிவந்த நிலையில், 10 லட்சம் ரெம்டெசிவிர் மருந்து குடுவைகளை மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு நேற்று மத்திய அரசு வழங்கியுள்ளது. அதன்படி, அதிகபட்சமாக மஹாராஷ்ட்ரா மாநிலத்திற்கு 2.69 லட்சம் ரெம்டெசிவிர் குடுவைகளும் குஜராத் மாநிலத்திற்கு 1.43 லட்சம் ரெம்டெசிவிர் குடுவைகளும் வழங்கப்பட்டுள்ளன.

மேலும் இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசம் மாநிலத்திற்கு 1.22 லட்சம் ரெம்டெசிவிர் , டெல்லிக்கு 61,825 ரெம்டிசிவர் மருந்து குடுவைகள் வழங்கப்பட்டுள்ளன. தமிழகம்ஆந்திரா மாநிலங்களுக்கு 58,881 ரெம்டெசிவிர் குடுவைகள் வழங்கப்பட்டுள்ளன.

மேலும் 38 லட்சம் ரெம்டெசிவிர் குடுவைகள் உற்பத்தி செய்யப்படும் நிலையில், அதனை 74 லட்சம் குடுவைகளாக அதிகரிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதற்காக, ரெம்டெசிவிர் மருந்தை உற்பத்தி செய்ய கூடுதலாக 20 ஆலைகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

Exit mobile version