கேரளாவில் கொரோனா வைரஸ் தொற்று அதிகமாகி உள்ளது. இந்த நிலையில் மக்கள் கொரோனா வைரஸை எதிர்த்து போராடுவதா இல்லை தினம் ஒரு குற்றம் என கேரளாவை நாசமாக்கிய கம்யூனிஸ்ட் கட்சியை எதிர்த்து போராடுவதா என்பது தெரியாமல் தவித்து வருகிறார்கள். லவ் ஜிகாத் முதல் தங்கம் கடத்தல் வரை கம்யூனிஸ்டுகளின் தரம் கெட்ட ஆட்சி நடந்து வருகிறது. தற்போது மக்களுக்கும் முக்கியமாக பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை கேரளாவில் இருந்து வருகிறது.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண்ணை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் கடந்த சனிக்கிழமை இரவு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அந்த மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம், பத்தனம்திட்டா மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட பெண்ணை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் யாரும் இல்லாத இடத்தில் ஆம்புலன்ஸை நிறுத்திவிட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளான் நவ்ஃபால் எனும் காமக்கொடூரன். மேலும் வெளியில் சொன்னால் கொலை சையது விடுவேன் என்றும் கூறியுள்ளான். மருத்துவமனைக்கு வந்த பிறகு அந்த பெண் தனக்கு நேர்ந்த கொடுமையை மருத்துவ நிர்வகித்திடம் கூறியுள்ளார். பின் மருத்துவமனை நிர்வாகம் காவல்துறைக்கு புகார் கொடுத்துள்ளது. புகாரின் அடிப்படையில் ஆம்புலன்ஸ் டிரைவர் கைது செய்யப்பட்டு
சிறையில் அடைக்கப்பட்டுள்ளான்.
இது குறித்து பத்தனம்திட்டா மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கே.ஜி.சைமன், ஆம்புலன்ஸ் ஓட்டுநர் நவ்ஃபால் கைது பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆலப்புழா மாவட்டத்தைச் சேர்ந்த நவ்ஃபால் மாநில சுகாதாரத் துறையின் 108 ஆம்புலன்ஸ் சேவையில் இருந்து வந்தார். 2019ம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட கொலை முயற்சி வழக்கில் அவர் ஒரு குற்றவாளி என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
காவல்துறை பாதிக்கப்பட்ட பெண்ணின் அறிக்கையை போலீசார் பதிவு செய்துள்ளனர். அவருக்கு சிகிச்சையளிக்கப்படுகின்ற கோவிட் அமருத்துவமனையில் அந்த பெண்ணுக்கு சிறப்பு மனநல ஆலோசனை வழங்கப்பட்டது.