கேரளாவில், தேவாலயத்திற்கு சொந்தம் கொண்டாடுவதில் , இரு தரப்பினருக்கு இடையே கலவரம் ஏற்பட்டது இதனால் 12 பாதிரியார்களை, காவல்துறை கைது செய்தனர்.
கேரளா எர்ணாகுளம் அருகே உள்ள , பிராவோம் என்ற இடத்தில், பழமை வாய்ந்த துாய மேரி தேவாலயம் உள்ளது இதாய் சொந்தம் கொண்டாடுவதில் ஜாகோபிட்ஸ், கிறிஸ்தவர்கள் மலங்கரா கிறிஸ்தவர்கள் என இரு பிரிவினருக்கு இடையே , பல ஆண்டுகளாக பிரச்சனை இருந்து வந்தது. இந்த தேவாலயம் தொடர்பான பிரச்சனை சில நேரங்களில் கலவரம் ஏற்படும் வகையில் மோதல் நடைபெறும்.
ஒரு வரமாக தேவாலயத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர் ஜாகோபிட்ஸ் கிறிஸ்துவர்கள். இதை அறிந்த மலங்கரா கிறிஸ்துவர்கள் தேவாலயத்திற்கு உள்ளே செல்லே முயன்றனர் இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. கலவரம் ஏற்படும் நிலை வந்தது.
இதை அறிந்த கேரளா காவல்துறை சமாதானம் செய்ய முற்பட்டனர் ஆனால் அது தோல்வியில் முடிந்தது. பின்னர் அங்கு காவல் துறை குவிக்கப்பட்டது. காவல்துறை தேவாலயத்தில் உள்ளே நுழைய முற்பட்டபோது ஜாகோபிட்ஸ் கிறிஸ்துவர்கள் போலீசாரை உள்ளே விடாமல் தடுத்தனர்.
வெளிய நின்று கோஷம் போட்ட மலங்கரா கிறிஸ்துவர்களை கலைத்து விட்ட பிறகு தேவாலயத்தின் உள்ளே சென்றே காவல்துறை அங்கு இருந்த 12 பாதிரியார்கள் மற்றும் கூடியிருந்தவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர். அந்த பகுதியில் பதட்டம் அதிகமாக இருப்பதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.















