பிளஸ்-2 தேர்வு முடிவுகள்: 94.56 சதவீத மாணவர்கள் தேர்ச்சி! மாணவிகளே முன்னிலை! முழுவிபரம்!

12TH RESULT

12TH RESULT

தமிழகத்தில் மாநிலக் கல்வி பாடத் திட்டத்தில் 12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு மார்ச் 1 முதல் மார்ச் 22ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்தத் தேர்வை சுமார் 7.8 லட்சம் மாணவர்கள் எழுதினர். குறிப்பாக 7 ஆயிரத்து 534 பள்ளிகளில் படித்த 7 லட்சத்து 80 ஆயிரத்து 550 மாணவர்கள், தனித்தேர்வர்கள் 8 ஆயிரத்து 190 பேர் 12ஆம் வகுப்புத் தேர்வை எழுதினர்.

இந்நிலையில், ஏற்கனவே அறிவித்தபடி பிளஸ்-2 தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியானது. தேர்வு முடிவுகளை தேர்வுத்துறை இயக்குனர் சேதுராம வர்மா வெளியிட்டார்.இதில், மொத்தம் 94.56 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வெழுதிய 125 சிறைவாசிகளில் 115 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஒரு பாடத்தில் 100 மதிப்பெண்கள் பெற்ற மாணாக்கர்களின் மொத்த எண்ணிக்கை – 26 ஆயிரத்து 352

கடந்த ஆண்டு 94.03 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருந்த நிலையில், இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது.மாணவர்கள் தேர்ச்சி சதவீதம் 92.37, மாணவிகள் தேர்ச்சி சதவீதம் 96.44 தேர்ச்சி பெற்றுள்ளனர்.இந்த ஆண்டும் மாணவர்களைவிட மாணவிகளின் தேர்ச்சி விகிதம் அதிகம்.அறிவியல் பாடத்தில் 96.33 சதவீத மாணவர்களும், இயற்பியல் பாடத்தில் 98.48 சதவீத மாணவர்களும், வேதியியலில் 99.14 சதவீத மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

சதமடித்த பாடங்கள் தமிழில் 35 பேரும், ஆங்கிலத்தில் 7 பேரும், இயற்பியலில் 633 பேரும், வேதியியலில் 471 பேரும், உயிரியலில் 652 பேரும், கணிதத்தில் 2 ஆயிரத்து 587 பேரும், தாவரவியலில் 90 பேரும், விலங்கியலில் 382 பேரும், கணினி அறிவியலில் 6 ஆயிரத்து 996 பேரும், வணிகவியலில் 6 ஆயிரத்து 142 பேரும், கணக்குப் பதிவியலில் ஆயிரத்து 647 பேரும், பொருளியலில் 3 ஆயிரத்து 299 பேரும், கணினிப் பயன்பாடுகளில் 2 ஆயிரத்து 251 பேரும், வணிகக் கணிதம் மற்றும் புள்ளியலில் 210 பேரும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்களை பெற்று அசத்தியுள்ளனர்.

மொத்தமாக 7 லட்சத்து 60 ஆயிரத்து 606 பேர் 12ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதியுள்ளனர். அவர்களின் மாணவர்கள் 3 லட்சத்து 52 ஆயிரத்து 165 பேரும், மாணவியர்கள் 4 லட்சத்து 8 ஆயிரத்து 440 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளன,

மாநில அளவிலான தேர்ச்சி விகிதத்தில், 97.45 சதவிகிதத்துடன் திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. அதைதொடர்ந்து, ஈரோடு மாவட்டம் மற்றும் சிவகங்கை மாவட்டங்கள் 97.42 சதவிகிதத்துடன் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளன. அரியலூர் மாவட்டம் 97.25 சதவிகிதத்துடன் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.

12ம் வகுப்பு பொதுத்தேர்வில் அரசுப்பள்ளி மாணவர்கள் 91.2 சதவிகிதமும், தனியார் பள்ளி மாணவர்கள் 96.7 சதவிகிதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் 95.49 சதவிகிதமும், மகளிர் பள்ளிகளில் 96.39 சதவிகிதமும், ஆண்கள் பள்ளிகளில் 86.96 சதவிகிதமும், இருபாலர் பள்ளிகளிகளில் 94.7 சதவிகிதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியவர்களில் மாணவிகள் 96.44 சதவிகிதமும், மாணவர்கள் 92.37 சதவிகிதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

Exit mobile version