நீலகிரி மாவட்டம் ஊட்டியை சேர்ந்தவர் ஸ்டீபன் அந்த பகுதியில் மத பிரச்சாரம் மேற்கொண்டுவந்துள்ளார். மதபோதகரான ஸ்டீபன் அந்த பகுதியில் ஜெபக்கூடமும்நடத்திவந்துள்ளார். மேலும் இவருக்கு திருமணமாகி மனைவியும் 2 மகள்களும் உள்ளனர். இந்த நிலையில் மத பிரார்த்தனைக்கு அப்பகுதி வீடுகளுக்கு சென்று ஜெபிப்பதும் உண்டு.
இந்த நிலையில் ஸ்டீபன் தனது வீட்டுக்கு அருகில் உள்ள ஜெபிக்க மற்றொரு பகுதிக்கு சென்றார். அங்கு ஒரு வீட்டில் 13 வயது சிறுமி தனியாக இருந்தாள். இதனை அறிந்து கொண்ட ஸ்டீபன் சிறுமியின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து அச்சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
சிறுமியின் வீட்டிற்கு உள்ளே நுழைந்த ஸ்டீபன் ஜெபம் செய்வதாக கூறி சிறுமியின் அருகே சென்றுசிறுமியை சீண்டியுள்ளான். மேலும் சிறுமிக்கு பாலியல் தொல்லைகொடுத்துள்ளான் மதபோதகர் ஸ்டீபன். இதனை தொடர்ந்து அதிர்ச்சியான சிறுமி சத்தம் போட்டார். பயந்துபோன மதபோதகர் ஸ்டீபன் அங்கிருந்து தப்பியோடிவிட்டான். சிறுமியின் தாய் மாலையில் வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்தார். அப்போது சிறுமி தனக்கு நடந்த சம்பவத்தை தாயிடம் தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து சிறுமியின் தாய், அவரை அழைத்து கொண்டு ஊட்டி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் மதபோதகர் ஸ்டீபன் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானது. உடனடியாக காவல்துறை ஸ்டீபன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.பின்னர் ஊட்டி நீதிமன்றத்தில் நீதிபதி ஸ்ரீதரன் முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.
மதபோதகரை 2 வாரம் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து ஸ்டீபனை பாதுகாப்புடன் அழைத்து சென்று குன்னூர் கிளை சிறையில் அடைத்தனர்.