15 வயது சிறுவனிடம் காவல் ஆய்வாளர் நடைபெறும் முறையைப் பாருங்கள்

கிருஷ்ணகிரி மாவட்டம் பூசாரிப்பட்டி பகுதியில் இன்று காலை மஹராஜ கடை காவல்நிலைய ஆய்வாளர் கணேஷ்குமார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது காதில் கடுக்கன் அணிந்துகொண்டு, வித்தியாசமான கோழிக்கொண்டை ஹேர்ஸ்டைலுடன் 15 வயது மதிக்கத்தக்க ஒரு சிறுவன் அப்பகுதியில் வந்துகொண்டிருந்தான். அதைப்பார்த்த காவல் ஆய்வாளர் ஒருவர் அச்சிறுவனை அழைத்து விசாரணை நடத்தினார். விசாரணையில் சிறுவன் கத்தாழை மேடு பகுதியை சேர்ந்தவர் எனத் தெரிய வந்தது

15 வயது சிறுவனிடம் காவல் ஆய்வாளர் நடைபெறும் முறையைப் பாருங்கள்

இந்த சிறு வயதில் இப்படியொரு அலங்கோலமான ஹேர்ஸ்டைல் தேவையா என்று நொந்துபோன காவல் ஆய்வாளர் கணேஷ்குமார், சிறுவனை அருகில் இருந்த சலூன் கடைக்கு அழைத்துச் சென்று, சீராக முடிதிருத்தம் செய்து அனுப்பி வைத்தார்.
மேலும் படிக்கிற வயதில் இதுபோன்று ஹேர்ஸ்டைல் வைத்திருக்கக்கூடாது எனவும் படிப்பில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அச்சிறுவனுக்கு அறிவுரை கூறினார்.

FacebookTwitterWhatsAppMessengerTelegramWeChatLineShare
Exit mobile version