பாரத திருநாட்டில் தேர்தல் திருவிழா ஏழு கட்டங்களாக நடந்து முடிந்தது.
இந்த ஜனநாயக திருவிழா தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பே பிரதமர் மோடி தனது தேர்தல்பிரச்சாரத்தை தொடங்கி விட்டார்.தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டபோது, அவர் தென்னிந்தியாவில் உள்ள 5 மாநிலங்களில் 3 நாள் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார். கடந்த 2019-ம் ஆண்டு மக்களவை தேர்தலில் தமிழகம், கேரளா, ஆந்திர பிரதேசத்தில் பாஜகவுக்கு வெற்றி கிடைக்க வில்லை. அதனால் இங்குவெற்றி பெற பாஜக., இந்த முறை கூடுதல் கவனம் செலுத்தியது. கர்நாடகாவில் தனது பலத்தை தொடர்ந்து பராமரிக்கவும், தெலங்கானாவில் பலத்தை அதிகரிக்கவும் பாஜக வியூகம் வகுத்தது. பிரதமர் மோடி தமிழகத்துக்கு 7 முறை வந்தார்.
கடந்த 2019-ம் ஆண்டு மக்களவை தேர்தலில், பிரதமர் மோடி நாடு முழுவதும் 68 நாட்கள் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். ஆனால் இந்த தேர்தலில் அவரது தேர்தல் பிரச்சார நாட்கள் 76-ஆக அதிகரிக்கப்பட்டது. கடந்த தேர்தலில் 145 பொதுக் கூட்டங்களில் மட்டுமே பிரதமர் மோடி பங்கேற்றார். ஆனால் இந்த முறை பொதுக் கூட்டம், ஊர்வலம் என 206 பொது நிகழ்ச்சிகளில் மோடி பங்கேற்று மக்களிடம் வாக்கு சேகரித்தார். கடைசியாக தனது சூறாவளி பிரச்சாரத்தை பஞ்சாப் மாநிலத்தின் ஹோசியார்பூரில் பிரதமர் மோடி நேற்று நிறைவு செய்தார்.
தேர்தல் பிரச்சார கூட்டங்களில் எதிர்க்கட்சிகளை பிரதமர் மோடி கடுமையாக விமர்சித்தார்.
தற்பொழுது முடிந்துள்ள நிலையில் மக்களவை தேர்தல் : தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு தனியார் செய்தி நிறுவனங்கள் வெளியிட்டுள்ளது.
Republic TV-PMARQ.
பாஜக கூட்டணி: 359,I.N.D.I.A கூட்டணி: 154,OTHERS: 30
NDTV
பாஜக: 371,காங்கிரஸ்: 125,மற்றவை: 47
REPUBLIC TV
BJP 359,I.N.D.I.A 154.OTHERS 30
NDTV
BJP 371.,I.N.D.I.A 125,OTHERS 47
NEWSX
BJP 371,I.N.D.I.A 125,OTHERS 47
INDIA NEWS
BJP 371,I.N.D.I.A 125,OTHERS 47
தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி 36 முதல் 39 இடங்களை பிடிக்கும் – நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சி கருத்துக்கணிப்பு முடிவு வெளியீடு.
பாஜக கூட்டணி 1 முதல் 3 இடங்கள் பிடிக்கும்.
அதிமுக 0 முதல் 2 இடங்கள் பிடிக்கும்.
INDIA TODAY தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்:
தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி 33 முதல் 37 இடங்களை பிடிக்கும்.
பாஜக கூட்டணி 2 முதல் 4 இடங்கள் பிடிக்கும்,அதிமுக 0 முதல் 2 இடங்கள் பிடிக்கும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் பாஜக மற்றும அதன் கூட்டணி கட்சிகளே பெரும்பாலான இடங்களை கைப்பற்றுவதாக தெரிவிக்கின்றன. இந்தியா நியூஸ் டி டைனமிக்ஸ் நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் பாஜக மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.