கேரளாவில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு- 7 மாதத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போக்சோ வழக்குகள் கேரள மாநிலத்தில் பாலியல் வன்கொடுமைகள் பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவங்கள், சிறுமிகளுக்கு எதிராக பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்த வண்ணம் உள்ளது. நாள் ஒன்றுக்கு சராசரியாக 10 போக்சோ வழக்குகள் கேரளாவில் பதிவாகின்றன.
லவ் ஜிகாத் முதல் தங்கம் கடத்தல் வரை எதையும் தடுக்க முடியாத கம்யூனிஸ்டுகளின் ஆட்சி நடந்து வருகிறது. தற்போது மக்களுக்கும் முக்கியமாக பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை கேரளாவில் நிலவி வருவது குறிப்பிடத்தக்கது
கேரளாவில் கடந்த சில வருடங்களாக சிறுவர்-சிறுமிகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவது காவல்துறை கைகள் கட்டுபோட்டுள்ளனவா என மக்கள் கேள்விகளை எழுப்பி வருகிறார்கள். ஆண்டுக்கு ஆண்டு இந்த குற்றங்களுக்கான வழக்குகள் அதிகரித்தே வருகிறது. இது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவில் கடந்த 7 மாதங்களில் மட்டும் 2ஆயிரத்து 234 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. அதில் 833 சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்டுள்ள வழக்குகளும் அடங்கும். மேலும் 8 சிறுமிகள் கொல்லப்பட்டுள்ளனர். ஒரு நாளைக்கு சராசரியாக 10 போக்சோ வழக்குகள் பதிவாகின்றன.கடந்த 5 ஆண்டுகளில் 16 ஆயிரத்து 944 போக்சோ வழக்குகள் பதிவாகி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத மாநிலமாக கேரள உள்ளது. இந்தியாவில் பெண்கள் பாலியல் வன்கொடுமைகளால் அதிகம் பாதிக்கப்படுவது கேரளாவில் தான் என்ற தகவல் வெளியாகி உள்ளது. மேலும் பாஜக ஆளும் மாநிலங்களில் எதாவது சிறு தவறு நடந்துவிட்டால் அதை ஊதி பெரிதாக்கும் தமிழக அரசியல்வாதிகள் அண்டை மாநிலமான கேரளாவில் நடக்கும் கொடூரத்தை கண்டிக்க கூட வாய் திறக்கவில்லை!
பெண் நீதி என்றால் பாராளுமன்றத்தில் குரல் கொடுக்கும் முதல் ஆளாக இருக்கும் கனிமொழியோ கேரளா சம்பவங்களுக்கு குரல் கொடுக்காமல் கண்ணிற்கு எட்டாத தூரத்தில் இருக்கிறார்கள்