தென்காசி மசூதியில் 200க்கும் மேற்பட்டோர் தொழுகை! கலைக்க சென்ற அதிகாரிகள் மீது கல்வீச்சு!

உலகத்தை அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்றை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு போடப்பட்டுள்ளது. இந்த நிலையில் கோயில் தேவாலயங்கள் மூடப்பட்டுள்ளது. தொடர்ந்து இஸ்லாமிய மசூதிகளில் மட்டும் வெள்ளிக்கிழமை ஆனால் சட்டத்தை மதிக்கமால் தொழுகை நடத்தி வருகிறார்கள். கொரோனா வைரஸை தடுப்பதற்கு சமூக இடைவெளிதான் முக்கியம் ஆனால் அதை கடைபிடிக்காமல் மாசூதிகளில் கூட்டம் கூட்டமாக சேர்ந்து தொழுகை நடத்துகிறார்கள்.

அதுவும் மசூதிகளில் தொழுகைக்கு தடை விதிக்கப்பட்டது. இஸ்லாமிய மத தலைவர்களும் முஸ்லிம்கள் அனைவரும் தங்கள் வீட்டிலேயே தொழுகை நடத்திக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினர்.நிலைமை இவ்வாறு இருக்க தென்காசி நடுப்பேட்டை பள்ளிவாசலில் அனுமதி இன்றி நேற்று இஸ்லாமியர்கள் 200 க்கும் மேற்பட்டவர்கள் பள்ளிவாசலில் தொழுகைக்கு கூடியுள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த தென்காசி வட்டாட்சியர் சண்முகம், காவல் ஆய்வாளர் ஆடிவேல் மற்றும் காவலர்கள் மசூதிக்கு விரைந்து சென்றனர்.ஐமாத் நிர்வாகிகளிடம் பேசி, அனைவரையும் வெளியே வருமாறு கூறினர்.

இதை ஏற்காமல் வாக்குவாதம் செய்து, நாற்காலிகள் உள்ளிட்டவைகளை காவலர்கள் மீது வீசி ரகளையில் ஈடுபட்டுள்ளனர். இதையத்து, அவர்களை காவல்துறையினர் விரட்டியடித்தனர்.

அப்போது, காவல்துறையிடம் சிலர் சிக்கினர். அவர்களை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.மேலும், காவல் ஆய்வாளர் உட்பட 2 காவலருக்கு லேசான காயம் ஏற்பட்டதாகக் ஏற்பட்டுள்ளது.

Exit mobile version