இந்தியாவிலேயே அதிக கடன் வாங்கிய மாநிலமாக தமிழகம் மாறி வருகிறது. இதற்கு நிதி அமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டுமென தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை வலியுறுத்தினார்.தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று செய்தியர்களிடம் பேசியதாவது: தமிழகத்தில் கடந்த இரண்டு வாரங்களாக 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை வைத்து அரசியல் நடந்து கொண்டிருக்கின்றது.மத்திய அரசு இதற்கான முதல் தவணையை விடுவித்துள்ளது.
100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் 246 கோடியே 13 லட்சத்திற்கு ஊழல் நடந்து இருக்கிறது. அக்டோபர் மாதம் நடந்த கணக்கு தணிக்கையில் இது தெரிய வந்துள்ளது. ஊழல் செய்யப்பட்ட பணத்தில் ஒரு கோடியே 85 லட்சம் தான் தமிழக அரசால் மீட்கப்பட்டுள்ளது. விரைவாக அனைத்து பணத்தையும் மீட்க வேண்டும்.தமிழக அரசு பணத்தை மீட்க மெத்தனம் காட்டிவருகிறார்கள ஏன்?
நூறு நாள் வேலை திட்டத்தில் தமிழகத்தில் உள்ள 37 மாவட்டங்களில் ஏன் இதுவரை குறைதீர்ப்பு அதிகாரி நியமிக்கவில்லை. உடனடியாக குறைதீர்ப்பு அதிகாரியை நியமிக்க வேண்டும். அந்த திட்டத்திற்கு போதுமான நிதி ஒதுக்கவில்லை என கூறுவது முற்றிலும் தவறானது. அந்த திட்டத்திற்கு மத்திய அரசு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் மத்திய அரசு 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் குறித்து விளக்கியுள்ளது.அதில் தமிழகம் செய்துள்ள 92 தவறுகளை சுட்டி காட்டி உள்ளது.
இதன் மூலம் பல அமைச்சர்கள் சிக்குவார்கள் என தெரிகிறது போக்குவரத்து துறை,மின்சார துறை தற்போது 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் என விடியல் அரசின் ஊழல்களை ஆதாரத்துடன் வெளிச்சத்திற்கு கொண்டு வருகிறார் அண்ணாமலை! இதனால் தி.மு.க அரசு கதிகலங்கி உள்ளது. ஆளுநரும் எந்த இடத்திலும் ஊழல் நடைபெறக்கூடாது அரசு அதிகாரிகளுக்கு சைலன்ட் உத்தரவு கொடுதுள்ளாராம் .