மஹாராஷ்டிரா கூட்டுறவு துறையில் 25,000 கோடி ஊழல்! தூசி தட்டி கையில் எடுக்கிறார் கூட்டுறவு துறை அமைச்சர் அமித் ஷா….

சென்ற வாரம் மத்திய மந்திரி சபை மாற்றி அமைக்கப்பட்ட போது கடைசியில் ஒரு அதிர்ச்சி வைத்தியம் ஒன்றை கொடுத்தார் பிரதமர் . மத்தியில் கூட்டுறவுத் துறைக்கு ஒரு இலாக்காவை ஏற்படுத்தி அந்த பொறுப்பை -அதாவது Co-operation Minister என்ற பதவியை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் பிரதமர் ஒப்படைத்த போது ‘என்ன இது…? இவ்வளவு பெரிய powerful minister க்கு ‘ தம்மாத்துண்டு’ பொறாத கூட்டுறவு துறையா..? என அனைவரும் வியந்தனர் ஏன் எதற்காக புரியாமல் தவித்தார்கள்

இந்த நிலையில் தான் கூட்டுறவு துறைக்கு எதற்கு என எதிர்ப்பு தெரிவித்து, மாநிலங்களின் அதிகாரங்களை மத்திய அரசு தட்டிப்பறிக்கிறது என சரத் பவார்தான் அறிக்கை கொடுத்தார். அவர் மட்டும் முதலில் எதிர்ப்பு தெரிவித்தது ஏன் என அனைவரிடத்தில் கேள்விகள் எழுந்தது. கூட்டுறவுத்துறை வங்கிகளில் ஒரே ஒரு மாநிலத்தில் மட்டும் ₹ 25,000 கோடி பணம் கையாடல் செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் விவசாயி என்று பினாமி பெயரில் தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கட்சித் தலைவர்கள் நிறைய கடன் வாங்கி பின்னர் இவர்கள் கட்சிகளே ஆட்சி செய்யும் மகாவிகாஸ் அகாதி அரசை விவசாய கடனகளை தள்ளுபடி செய்ய வைத்ததால் கடனாக பெற்ற கோடிக்கணக்கான தொகையை
ஏமாற்றி விட்டார்கள் என செய்திகள் பரவியது

இந்த ஊழலில் பெரும் பங்கு சரத் பவாரின் அண்ணன் மகனும் மகாராஷ்டிரா துணை முதலமைச்சருமான அஜித் பவார் என தகவல்கள் தெரிவிக்கின்றது . இதுமட்டுமல்லாமல் சென்ற 2019 ஆண்டு பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கிகளில் ₹ 4,500 கோடி ஊழல் கண்டுபிடிக்கப்பட்டு வழக்கு பம்பாய் உயர்நீதி மன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த Punjab & Maharashtra Co-operative வங்கிக்கு நாடு முழுவதும் 137 கிளைகளும் மும்பையில் மட்டும் 12 கிளைகளும் உள்ளன. மும்பையில் உள்ள இரண்டு கிளைகளிலிருந்துதான் இந்த பணம் கையாடல் செய்யப்பட்டுள்ளது .இவர்கள் ஆட்சியில் இருப்பதால் வழக்கின் விசாரணை சரியான திசையில் செல்லவில்லை .

வங்கியில் ஏழை , எளிய மக்கள் தாங்கள் குருவி போல் சேர்த்த பணத்தை நிரந்திர வைப்புத் தொகையாக போட்டு வைத்திருந்தனர். பெரும்பாலான வாடிக்கையாளர்கள் தங்கள் பிள்ளைகளின் மேற் படிப்பிற்காகவும், பெண் குழந்தைகளின் திருமண செலவிற்காகவும் தேவைப்பட்ட போது வங்கிக்கு சென்று பணம் கேட்ட போதுதான் தங்கள் பணம் கொள்ளையடிக்ககப் பட்டது தெரிந்து அதி்ர்ச்சியடைந்து போராட்டத்தில் இறங்கி ஆயிரக்கணக்கானோர் நடு வீதிக்கு வந்து விட்டனர்.

ஒரு மாநிலத்தில் இவ்வளவு ஊழல் என்றால் நாடு முழுவதும் உள்ள பல்லாயிரக்கணக்கான கூட்டுறவு வங்கிகளில் எவ்வளவு மோசடி நடைபெற்றிருக்கும் என விளக்கத் தேவையில்லை. இதை வேரோடு அறுக்கத்தான் மோதி இந்த அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.உடனே மத்திய அரசு மாநிலத்தின் உரிமைகளை பறிக்கின்றது என்று பொரியில் சிக்கியவர்கள் புலம்புகின்றனர் .

வலது சாரி சிந்தனையாளர்..

Exit mobile version