சென்னை மாநகராட்சியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 34 பணியாளர்களுக்கும் கருணைத் தொகையாக தலா ரூ. 2 லட்சம் வழங்கப்படும் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதுமட்டுமில்லமல் குறிப்பாக சென்னையில் அதிகமாக பரவியுள்ளது . ஒரு சில தூய்மை பணியாளர்களுக்கும் கொரோன தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருவதால் சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் தங்களது வேலை நேரத்துக்கும் அதிகமாக பணியாற்றி வருகின்றனர். இதில், தூய்மைப் பணியாளர்கள் பலரும் கரோனாவால் பாதிக்கப்பட்டு வரும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
இந்நிலையில், சென்னை மாநகராட்சியில் கரோனவால் பாதிக்கப்பட்ட 34 பணியாளர்களுக்கும் கருணைத் தொகையாக தலா ரூ. 2 லட்சம் வழங்கப்படும் என்று உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிவித்துள்ளார்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















