கிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அஜர்பைஜானில் நடந்த நிகழ்ச்சியில் இந்தியா, தங்கள் நாட்டின் மீது நடத்திய தாக்குதலில் பலத்த சேதம் அடைந்ததை ஒப்புக்கொண்டுள்ளார். ஷெபாஸ் ஷெரீப் கூறியதாவது:- மே 9, 10 ஆம் தேதி இரவு, இந்தியாவின் தாக்குதலுக்கு நாங்கள் பதிலடி கொடுக்க திட்டமிட்டு இருந்தோம். எங்கள் ஆயுதப்படைகள் பதிலடி தாக்குதல் தொடுக்க தயாராகி கொண்டு இருந்தது. காலை 4.30 மணிக்கு பிறகு தாக்கலாம் என்று நினைத்து இருந்தொம். ஆனால், அதற்கு முன்பாக இந்தியா தாக்கிவிட்டது. பிரமோஸ் உள்ளிட்ட ஏவுகணைகளை கொண்டு இந்தியா தாக்குதல் நடத்தியது. ராவல் பணிட் உள்ளிட்ட விமான தளங்கள் உள்பட பல்வேறு மாகாணங்கள் மீது தாக்குதல் நடத்தியது” என்றார். ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது தங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என முதலில் சமாளித்து பார்த்த பாகிஸ்தான் பிறகு உண்மையை ஒப்புக்கொள்ள தொடங்கியுள்ளது.
இந்தியா நடத்திய தாக்குதலில் பலத்த சேதம் அடைந்ததை பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஒப்புக்கொண்டது இது முதல் முறை கிடையாது. கடந்த மாதம் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஷெபாஸ் ஷெரீப், “மே 10 ஆம் தேதி அதிகாலை 2.30 மணியளவில் ராணுவ தளபதி எனக்கு போன் செய்தார். இந்தியா ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தியதாக என்னிடம் தகவல் தெரிவித்தார’ என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் பிச்சை கேட்டு போவதை சீனா, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், துருக்கி போன்ற நாடுகள் விரும்பவில்லை என்று பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில், ஒரு விஷயத்தை தெளிவாக சொல்லிக்கொள்கிறேன். நமக்கு இயற்கை மற்றும் மனித வளத்தை அளித்து இறைவன் ஆசிர்வதித்துள்ளான். அதை நாம் முழுமையாக பயன்படுத்த வேண்டும் என்றும், இவற்றை பயன்படுத்தி லாபத்தை ஈட்டும் முயற்சிகளில் ஈடுபட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
பாகிஸ்தான் கடுமையான நிதி நெருக்கடியில் தடுமாறி வருகிறது. பல்வேறு மாகாணங்களில் பஞ்சம் தலைவரித்தாடுகிறது. பாகிஸ்தானில் பண வீக்கம் உச்சம் தொட்டு விலைவாசியும் கடுமையாக உயர்ந்துள்ளது. இந்த நிதி நெருக்கடியை சமாளிக்க முடியாமல் சர்வதேச நாணய நிதியம் உள்ளிட்ட சர்வதேச நாடுகளிடம் பாகிஸ்தான் உதவி கேட்டு போய் நிற்கிறது.
புலம்பி தள்ளிய ஷெபாஸ் ஷெரீப்
அதுபோக, தனது நட்பு நாடுகளிடம் போய் கையேந்துவதற்கும் பாகிஸ்தான் தயங்குவது இல்லை. குறிப்பாக சீனா பெருமளவு நிதி உதவியை பாகிஸ்தானுக்கு அளித்து வருகிறது. நிதி நெருக்கடியில் பாகிஸ்தான் இப்படி தள்ளாடிக்கொண்டு இருக்கும் சூழ்நிலையில், அந்நாட்டு பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், ராணுவ அதிகாரிகள் மத்தியில் பேசும் போது புலம்பி தள்ளியிருக்கிறார்.
அதாவது சீனா, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், துருக்கி உள்ளிட்ட நாடுகளுடன் நமது நட்புறவு மேம்பட்டு இருக்கிறது எனவும், எனினும், பிச்சை பாத்திரத்துடன் அவர்களிடம் நாம் செல்வதை அவர்கள் எதிர்பார்ப்பது இல்லை என்றும் கூறியுள்ளார்.
பிச்சை பாத்திரத்துடன் செல்வதை
பாகிஸ்தானின் பலோசின்ஸ்தான் மாகாணத்தில் உள்ள குவெட்டா நகரில் ராணுவ அதிகாரிகள் மத்தியில் ஷெபாஸ் ஷெரீப் பேசினார். அப்பொது ஷெபாஸ் ஷெரீப் கூறியதாவது:- பாகிஸ்தானின் மிகவும் நம்பகமான நட்பு நாடாக சீனா உள்ளது. சோதனையான கால கட்டத்திலும் உற்ற நண்பனாக உள்ளது. அதேபோல, பாகிஸ்தானின் நம்பகமான மற்றும் மதிப்பு மிக்க கூட்டாளியாக சவுதி அரேபியா உள்ளது.
துருக்கி, கத்தார் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளும் நட்பு நாடாக உள்ளன. அதேவேளையில் ஒரு விஷயத்தை தெளிவாக சொல்லிக்கொள்கிறேன். வர்த்தகம், வணிகம் புதுமை, ஆய்வு, மேம்பாடு, கல்வி, சுகாதாரம், முதலீடு என பரஸ்பரம் லாபம் அளிக்கும் முயற்சிகளில் நாம் ஈடுபட வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். பிச்சை பாத்திரத்துடன் அவர்களிடம் செல்வதை எதிர்பார்க்கவில்லை. நமக்கு இயற்கை மற்றும் மனித வளத்தை அளித்து இறைவன் ஆசிர்வதித்துள்ளான். அதை நாம் முழுமையாக பயன்படுத்த வேண்டும். இவற்றை பயன்படுத்தி லாபத்தை ஈட்டும் முயற்சிகளில் ஈடுபட வேண்டும்” என்றார்.