தமிழக உளவுத் துறை, தி.மு.க., ஆட்சியில் முற்றிலும் செயல் இழந்து விட்டது. குற்றங்கள் பெருகி மக்களை குலைநடுங்க வைத்துள்ளது.
முன் விரோதக் கொலைகள், ஆதாயக் கொலைகள், வெடிகுண்டு வீச்சு, ரவுடிகளின் அராஜகங்கள் தினமும் நடக்கும் நிலையில், முதல்வரும், அவரது மகனும் ஏதேதோ பேசி, மக்களை திசை திருப்பி வருகின்றனர்.
தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்ற பின், தமிழக காவல் துறை தன் சுய முகவரியை இழந்து, ஆளுங்கட்சியின் கைப் பாவையாக மாறி உள்ளது.
சட்டம் – ஒழுங்கு சீர்கேடு நிகழ்வுகளை முன்னதாகவே அறிந்து, தடுப்பு நடவடிக்கைகள் எடுக்காமல், காவல் துறை வேடிக்கை பார்த்து வரும் நிலை, மிகவும் வெட்கக் கேடானது.
தி.மு.க., ஆட்சியில், போதைப் பொருட்களின் பிடியில் இளைஞர்கள் சிக்கி உள்ளனர். கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை என, பல்வேறு குற்றங்கள் தொடர்ந்து வருகின்றன.
இம்மாதம் 1ம் தேதி முதல் நேற்று முன்தினம் வரை மட்டும், 40க்கும் மேற்பட்ட கொலை சம்பவங்கள் அரங்கேறி உள்ளன.
அ.தி.மு.க., மாநாடுக்கு உரிய பாதுகாப்பு வழங்காமல், போக்குவரத்து நெரிசலை சீர் செய்யாமல், போலீஸ் வேடிக்கை பார்த்தது. இரு தினங்களுக்கு முன், சென்னை, பனையூர் பகுதியில், இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் நிகழ்ச்சியிலும் இதே நடந்தது.
இதன் காரணமாக, கிழக்கு கடற்கரை சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. முதல்வரின் வாகன அணிவகுப்பும், நெரிசலில் சிக்கிக் கொண்டது. இது, தி.மு.க., அரசின் காவல் துறை தோல்வியை காட்டுகிறது.
அதுபோல் இனியாவது, தமிழக காவல் துறையை சுதந்திரமாக செயல்பட அனுமதித்து, சட்டத்தின் ஆட்சி நடப்பதை உறுதி செய்ய வேண்டும். தமிழக மக்களின் அச்சத்தை, முதல்வர் போக்க வேண்டும்.