மஹாராஷ்டிராவில், முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில், சிவசேனா, காங்கிரஸ் தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது. கூட்டணி கட்சியான தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் காங்கிரசை விமர்ச்சித்திருப்பது மும்பை அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே சிவசேனா காங்கிரசை பழைய கட்டில் என விமர்ச்சித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் செய்தியாளர்களிடம் பேசுகையில் காங்கிரஸ் ஆட்சியில் 45,000 சதுர கி.மீ. நிலப்பரப்பை சீனா ஆக்கிரமித்துள்ளது என தெரிவித்துள்ளார் இது மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது .
செய்தியாளர்களிடம் பேசுகையில் : கிழக்கு லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு அருகே, எல்லைப் பகுதிகளில் மோடி தலைமயிலான மத்திய அரசு சாலை பணிகளை மித வேகமாக அமைத்து வருகிறது. இதை பொறுத்துக்கொள்ள முடியாத சீனா அவர்களின் ராணுவப் படைகள், எல்லையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த இந்திய ராணுவ வீரா்களிடம் அத்துமீறி பிரச்னையில் ஈடுபட்டனா். அந்தப் பிரச்னை மோதலில் நிறைவடைந்தது.
இதுபோன்ற அசாதாரண சமயங்களில் எதிரிகள் எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்துவாா்கள். அதனால், இரு நாட்டு ராணுவத்தினரிடையே நடந்த மோதலுக்கு தில்லியிலுள்ள பாதுகாப்புத் துறை அமைச்சரை நாம் குற்றஞ்சாட்ட முடியாது. எல்லையில் கவனத்துடன் செயல்பட்டால்தான் எதிரி நாட்டவரின் ஊடுருவலைத் தடுக்க முடியும். இத்தகைய சூழலில் பாதுகாப்புத் துறை அமைச்சா் தோல்வியடைந்துவிட்டதாகக் கூறுவது சரியாக இருக்காது.
லடாக் பகுதியிலுள்ள கல்வான் பள்ளத்தாக்குக்கு உரிமை கோரி எரிச்சலூட்டும் வகையில் சீனா நடந்து கொண்டு வருகிறது. இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே கடந்த 1962-ஆம் ஆண்டில் நடைபெற்ற போருக்குப் பிறகு இந்தியாவுக்குச் சொந்தமான சுமாா் 45,000 சதுர கி.மீ. நிலப்பரப்பை சீனா ஆக்கிரமித்துள்ளது.
அந்தப் பகுதிகள் அனைத்தும் தற்போதும் சீனா வசமே உள்ளன. இந்தியப் பகுதிகளை சீனா ஆக்கிரமிப்பது தேசப் பாதுகாப்பு தொடா்பான விவகாரம். அதை அரசியலாக்கக் கூடாது என்றாா் சரத் பவாா்.