அயோத்தியிலிருந்து திரும்பிய சபர்மதி எக்ஸ்பிரஸ், கோத்ரா ரயில் நிலையம் அருகே வந்தபொழுது, நான்கு ரயில் பெட்டிகளில் இருந்த இந்து பக்தர்களை, உள்ளெயே வைத்துப் பூட்டி, பெட்ரோல் ஊற்றிக் கொளுத்தப் பட்ட நாள்!!
எந்தப் பாவமும் செய்யாத 27 பெண்களும், 10 குழந்தைகளும், உயிருடன் தீயில் கருகி, இறந்த நாள்!
மோடியை ஆட்சியை எப்படியாவது கவிழ்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஒழித்துக்கட்ட, வேண்டும் என நினைத்த மதவெறி கும்பலால் அயோத்தியிலிருந்து திரும்பிய சபர்மதி எக்ஸ்பிரஸ் எரிக்கப்பட்ட இன்று, கோத்ரா இனப்படுகொலைக்குப் பின்விளைவாக, இயற்கையாக நிகழ்ந்த குஜராத் கலவரத்தில், நீதிமன்றத் தீர்ப்பு வருவதற்கு முன்னதாக, மோடியைக் குற்றவாளியாக சித்தரித்து எதிர்க்கட்சிகள் ஊடகங்கள் பரப்பத்தொடங்கின.

இதற்கடுத்து பலப்பல அப்பீல்களிலும், கமிஷன்களிலும், உச்ச நீதிமன்றம் அமைத்த சிறப்பு புலனாய்வுகளிலும், மோடி குற்றமற்றவர் எனத் தெரிந்த பிறகும்,… கோத்ரா படுகொலை பற்றி, நடுநிலைவாதிகள் யாரும் தற்போது பேசுவதில்லை. தீக்கிரையாக்கப் பட்ட அப்பாவி ஹிந்துக்களுக்காக இதுவரை, ஒரு சொட்டுக் கண்ணீர் சிந்தவில்லை! அவர்கள் குடும்பத்தில் உள்ளோர் ஒருவரின் துயரத்தில் கூட பங்கெடுக்கவில்லை.! அவர்கள் பற்றி எந்தச் செய்தியுமில்லை! இருட்டடிப்பு!
மதவெறிக் கும்பலுக்கு இரையான, ஹிந்து பக்தர்கள் ஐம்பத்து ஒன்பது பேருக்கும், இந்த நாளில், கண்ணீர் அஞ்சலி !
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















