விவசாயிகள் திட்டத்தில் கை வைத்த போலி தமிழ் விவசாயிகள்! தமிழகத்தில் 7.22 லட்சம் போலிகள், 340 கோடி ரூபாய் நிதி மோசடி

விவசாயிகளுக்கு ஆண்டு தோறும் 6000 ரூபாய் திட்டம் கிசான் சம்மன் நிதியுதவி திட்டம் இந்த திட்டத்தில் போலி விவசாயிகள் 42 லட்சத்துக்கும் அதிகமானோர் பலன் அடைந்துள்ளது தெரிய வந்துள்ளது. அவர்களது வங்கி கணக்கில் செலுத்தப்பட்ட, 3,000 கோடி ரூபாயை திரும்ப வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,” என, பாராளுமன்றத்தில் மத்திய விவசாய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்தார்.

கடந்த 2019 -ஆம் ஆண்டு பிரதமரின் கிசான் சம்மன் நிதி திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டம் மூலம் 5 ஏக்கருக்கும் குறைவாக நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூபாய் 6000 நிதி உதவி, 2000 ரூபாய் என மூன்று தவணைகளாக வழங்கப்படுகிறது.பிரதமரின் கிஷான் திட்டத்தில் சேருவதற்கு விவசாயியாக இருப்பது கட்டாயம். விவசாய குடும்பத்தில் உள்ளவர்களில் யாராவது முன்னாள், இந்நாள் அமைச்சர்கள், எம்.பி., – எம்,எல்.ஏ.,க்கள், மேயர், மாவட்ட பஞ்சாயத்து தலைவர், 10 ஆயிரம் ரூபாய்க்கு மேல் ஓய்வூதியம் பெறுவோர், வருமான வரி செலுத்துவோர் உள்ளிட்டோரும் இதில் பயன்பெற முடியாது.

தகுதியுள்ள விவசாயி களை மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் தேர்வு செய்து, மத்திய அரசுக்கு தெரிவிக்க வேண்டும்.ஆனால் தமிழகம் முழுவதும் ஆதார் விவரம், அடையாள அட்டை ஆகியவற்றை இடைத்தரகர்களிடம் யார் தந்தாலும் போதும் முதல் தவணையாக ரூபாய் 2 ஆயிரம் உடனே வந்து சேரும்..ஒவ்வொருவரிடமும் கமிஷன் தொகையாக தலா ஆயிரம் ரூபாயை இடைத் தரகர்கள் பெற்றுள்ளனர்
இந்த திட்டத்தின் கீழ் தமிழகத்தில் மட்டும், 7.22 லட்சம் போலிகள், 340 கோடி ரூபாய் நிதி உதவி பெற்றது தெரியவந்துள்ளது

நாடு முழுவதிலும் இதுவரை எட்டு தவணைகளில் 10 கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு 1 லட்சத்து 37 ஆயிரத்து, 192 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. விரைவில் ஒன்பதாவது தவணை நிதி வழங்கப்பட உள்ளது.இந்த திட்டத்தின் கீழ் 2 ஏக்கர் வரை நிலம் வைத்துள்ள விவசாயிகள் மட்டுமே நிதியுதவி பெற முடியும். உயர் வருவாய் பெறும் விவசாயிகள், கோவில் நிலம் வைத்திருப்போர் இந்த நிதி உதவியை பெற முடியாது.

பிரதமர் கிசான் திட்டம் குறித்து பாராளுமன்ற குளிர் கால கூட்ட தொடரில் விவசாயதுறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கூறியதாவது: சிறு, குறு, நடுத்தர விவசாயிகளின் பலன் அடையும் நோக்கில் தான், பிரதமர் விவசாயிகள் ஆதரவு நிதியுதவி திட்டம் செயல்பட்டு வருகிறது.சில அரசு அதிகாரிகளின் குறைபாட்டால் குளறுபடிகள் நடந்துள்ளது.

கிசான் திட்டத்தில் 42.16 லட்சம் போலியான விவசாயகளின் வங்கி கணக்கில் 2,992 கோடி ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது. இதை திரும்ப வசூலிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப் பட்டு உள்ளன.அசாமில் 8.35 லட்சம், தமிழகத்தில் 7.22 லட்சம், பஞ்சாபில் 5.62 லட்சம், மஹாராஷ்டிராவில், 4.45 லட்சம், உத்தர பிரதேசத்தில், 2.65 லட்சம், குஜராத்தில் 2.25 லட்சம் பேர் என, போலி விவசாயிகள் பயன் அடைந்துள்ளனர்.

போலியான விவசாயிகள் பலன் அடைவதை தடுக்க, தக்க நடவடிக்கைகள் அரசு மேற்கொண்டுவருகிறது எடுக்கப்பட்டு வருகின்றன.நிதியுதவி பெற தகுதிஉள்ள விவசாயிகளை தேர்வு செய்வதில் மாநில அரசுகளும், யூனியன் பிரதேச அரசுகளும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். ஏழை விவசாயிகளுக்கு உதவும் இந்த திட்டத்தில் முறைகேடுகளை அனுமதிக்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

FacebookTwitterWhatsAppMessengerTelegramWeChatLineShare
Exit mobile version