தமிழகத்தில் நடைபெற்ற குடியரசு தினவிழா அணிவகுப்பு புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.
டெல்லி குடியரசு தின அணிவகுப்பில் பங்குபெறவிருந்த தமிழ்நாட்டின் அலங்கார ஊர்தி இந்த முறை நிராகரிக்கப்பட்டுள்ளது. சரியான திட்டமிடாமலும்மத்திய அரசின் நிபுணர்குழு அறிவுரைகளை கேட்காமலும் அலட்சியமாக தமிழக அரசு செயல்பட்டதன் விளைவே இந்த முறை டெல்லி குடியரசு தின விழா ஊர்வலத்தில் தமிழகம் பங்கேற்க முடியவில்லை.
இந்த நிலையில், நேற்று நாட்டின் 73-வது குடியரசு தின விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னை மெரினா, காமராஜர் சாலையில் தேசியக்கொடியை ஏற்றி பின்னர், தமிழக அலங்கார ஊர்தி உள்ளிட்ட பல்வேறு ஊர்திகள் அணிவகுத்துவந்தன இந்த ஊர்திகள், தமிழ்நாடு முழுவதும் முதல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகின்றன.“சென்னையில் இன்று நடைபெற்ற குடியரசு நாள் அணிவகுப்பில் அணிவகுத்த தமிழக அரசின் அலங்கார ஊர்திகளில் இந்திய விடுதலைக்காகப் போராடிய, உயிர்நீத்த வடதமிழ் நாட்டைச் சேர்ந்த தலைவர்கள் எவரின் உருவச்சிலையும் இடம் பெறவில்லை.
சுதந்திரம் வேண்டாம் என சொன்ன ஈ.வே.ரா.ராமசாமி நாயக்கருக்கு சிலை வைத்ததும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது, இந்த முறை குடியரசு தின விழா ஊர்திகளில் ஈ.வே.ரா சிலை அமைக்கப்பட்டிருந்தது. . குடியரசு சுதந்திர போராட்டவீரர்களின் தியாகத்தை கேலி செய்யும் வகையில் இது வேண்டுமென்ற அமைக்கப்பட்டுள்ளது. என ஒரு பிரிவினர் கூறிவருகிறார்கள். ஈ.வே. ராமசாமிநாயக்கர் எப்போதாவது சுதந்திரப்போராட்டத்தில் கலந்துகொடு போராடியிருக்கிறாரா? இல்லை!சுதந்திரப் போராட்டத்திற்காக சிறை சென்றிருக்கிறாரா? இல்லை!சுதந்திரப்போராட்டத்தில் கலந்து கொண்டதற்காக வெள்ளையர்கள் ஈ.வே. ராமசாமி நாயக்கரை கைது செய்து இருக்கிறார்களா? இல்லை! இல்லவே இல்லை!!!
பின் எப்படி ஈ.வே. ராமசாமி நாயக்கர் சுதந்திரப் போராட்டவீரர்?
அன்று ஆட்சி வெள்ளையனிடம் இருந்தது, ஒரு சல்லிக்கும் பிரயோசனமில்லா உள்ளாட்சி என ஒன்று உருவாக்கபட்டு அதிலும் வெள்ளையன் சட்டத்துக்கு முழுக்க அடங்கிய பஞ்சாயத்து முறை ஒரு ஒப்புக்கு இருந்தது இந்நிலையில் சாதி ஒழிக்கபட வேண்டும் என்றால் வெள்ளையனிடம் கேட்டிருக்க வேண்டும், அவன் அதிகாரத்தில் சட்டமியற்றிருக்க போராடியிருக்கலாம்.
சமூக நீதியினை வெள்ளையனிடம் கோரியிருக்கலாம், வெள்ளையன் அரசில் இட ஒதுக்கீடு வேண்டும் என அவனிடம் மல்லுக்கு நின்றிருக்கலாம்அதையெல்லாம் விடுத்து , இந்தியாவின் செல்வங்களையெல்லாம் வெள்ளையன் சுரண்டி கொண்டிருக்கும் பொழுது, எல்லா தொழிலையும் அவனே செய்து இந்தியரை அட்டையாக உறிஞ்சிகொண்டிருந்தபொழுது அப்படி ஒருவன் ஆள்வதாகவோ, அவனிடம் ஆட்சி இருப்பதாகவோ கருதாமல் அவனிடம் ஆட்சி வேண்டும் என்றவர் ஈ.வே. ராமசாமிநாயக்கர்
அதைவிட கொடுமையாக தனிநாடு வேண்டும் என்றார், வெள்ளையன் இந்தியாவினை விட்டு போகவே கூடாது என்றார், சுதந்திரநாளை துக்கநாள் என சொல்லி தலையில் அடித்து கொண்டிருந்தார். இப்படி ஒரு விசித்திரமான குழப்பவாதி இப்பொழுது “இந்திய சுதந்திர போராட்ட வீரர்” என அறிமுகப்படுத்தியுள்ளார் ஸ்டாலின்.
இந்த நிலையில் தமிழகத்தில் வட மாவட்ட சுதந்திர போராட்ட வீரர்களான நாகப்ப படையாட்சி காந்தியடிகளுடன் இணைந்து போராடி உயிர்நீத்தவர், கடலூர் அஞ்சலையம்மாளின் வீரமும் தீரமும் காந்தியடிகளை வியக்கவைத்தவை. ஆதிகேசவ நாயக்கர் காந்தியிடம் சர்தார் பட்டம் பெற்றவர். ம.பொ.சி சிறந்த விடுதலை வீரர். இவர்களின் தேசப்பற்றும் தியாகமும் யாருக்கும் சளைத்தவையல்ல!. டெல்லி அணிவகுப்பில் தமிழகத் தலைவர்களின் சிலைகள் அடங்கிய ஊர்தி நிராகரிக்கப்பட்டதற்காகக் கொதித்தெழுந்த தமிழக அரசு, தமிழகத்தின் ஒரு பகுதி தலைவர்களைப் புறக்கணிப்பது நியாயமா? என மருத்துவர் ராமதாஸ் கேள்விகளில் எழுப்பியுள்ளார்.