சிஐஐ ஆண்டுக் கூட்டத்தில் காணொளி வாயிலாக பிரதமர் மோடி உரையாற்றினார் அவர் பேசியதாவது:
- கொரோனா பாதிப்பால் ஆன்லைன் நிகழ்ச்சிகள் புதிய முயற்சியாக உள்ளன
- மக்களை காக்க வேண்டும். அதேநேரத்தில் பொருளாதாரத்தை வலுப்படுத்த வேண்டும்.
- கொரோனாவால் இழந்த பொருளாதாரத்தை விரைவில் மீட்போம்
- விவசாயம், சுயதொழில் செய்வோர் தொழில்நுட்பத்தால் பொருளாதாரம் மீளும்
- இந்திய தொழில்துறை மீது முழு நம்பிக்கை உள்ளது.
- தொழிலதிபர்கள் திறமையால் பொருளாதாரத்தை மீட்டெடுத்து விடலாம்.
- தற்சார்பு இந்தியா தான் நம் முன் உள்ள ஒரே வழி
- பொருளாதாரத்தை வலுப்படுத்துவதை அரசு முதல் நோக்கமாக கொண்டுள்ளது.
- கரீப் கல்யாண் திட்டம் மூலம் 74 கோடி ஏழைக் பயனபெற்றுள்ளனர்
- மீண்டும் வளர்ச்சி பாதைக்கு திரும்புவோம் என்ற நம்பிக்கை உள்ளது
- வளர்ச்சியை மீட்பதே நமது முதன்மை நோக்கமாக இருக்க வேண்டும்
- கொரோனாஅச்சுறுத்தலுக்கு மத்தியிலும் நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி பாதையில்செல்கிறது.
- கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஏழைகளுக்கு உதவும் வகையில் திட்டங்கள்வகுக்கப்பட்டுள்ளன.
- ஏழை எளிய மக்களுக்கு அரசின் நலத்திட்டங்கள் பெரும் உதவிக்கரமாக உள்ளது
- ஏழை எளிய மக்களுக்கு 53 ஆயிரம் கோடி அளவுக்கு நிவாரண திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.
- வைரசை எதிர்த்து போராட நாம் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டியிருக்கும்
- 74 கோடி பேருக்கு ரேசன் பொருட்கள் விநியோகம்
- விவசாய பொருட்களை மின்னணு வர்த்தகத்தின் மூலமும் விற்பனை செய்யலாம்.
- 8 கோடி பேருக்கு கேஸ் சிலிண்டர்கள் வழங்கப்பட்டுள்ளன.
- தொழிலாளர் சட்டங்களில் சீர்திருத்தம் செய்து முதலீடு அதிகரிக்கப்படும்
- அரசு எடுத்து வரும் நடவடிக்கையால், நிலக்கரி, எரிசக்தி, ஆராய்ச்சி மற்றும்தொழில்நுட்பத்துறை என அனைத்து துறைகளிலும் இளைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் உள்ளன.
- கொரோனாவுக்கு எதிராக பொருளாதாரத்தை வலுப்படுத்த அரசு முன்னுரிமை அளித்துள்ளது. இதற்காக அரசு உடனடியாக முடிவெடுத்தது. நாட்டிற்கு நீண்ட காலம் பயனளிக்கும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இவ்வாறு பிரதமர் மோடி அவர்கள் உரையாற்றினார்கள்.