80 கோடி மக்களுக்கு ரூ.26,000 கோடி மதிப்பில் இலவசமாக உணவு தானியங்கள்- மத்தியரசு

மத்திய அரசிற்கு நன்றி !

கொரோனா இரண்டாவது அலை மக்களிடம் வேகமாகப் பரவி வருகின்ற காரணத்தினால் 18 வயது நிரம்பியவர்கள் முதல் அனைவருக்கும் தடுப்பூசி போடுதல், ஆக்சிஜன் சிலிண்டர்கள் பற்றாக்குறை ஏற்படா வண்ணம் தேசிய அளவில் திட்டமிடல் போன்ற பணிகளில் மத்திய அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது. இந்நிலையில் பல்வேறு மாநில அரசுகள் ஊரடங்கு அறிவித்து வருகின்றன.

இதனால் ஏழை எளிய மக்கள் பாதிப்புக்குள்ளாக வாய்ப்பு உள்ளதால், இந்தியா முழுவதும் 80 கோடி பயனாளிகளுக்கு தலா 5 கிலோ உணவு தானியங்கள் இலவசமாக வழங்க மத்திய அரசு முன்வந்துள்ளது. மே, ஜூன் மாதங்களில் இந்த உதவியை மக்கள் பெற முடியும். உடனடி நிவாரணமாக இத்தகைய உதவியை அறிவித்த மத்திய அரசுக்கு பாராட்டுக்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். மத்திய மாநில அரசுகள் அறிவிக்கின்ற கொரோனா பாதுகாப்பு முறைகளை பொதுமக்கள் அனைவரும் தவறாது கடைபிடிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.

Covid19 #LMurugan

Exit mobile version