திமுகவில் 90% இந்துக்கள் இருப்பதாக கூப்பாடு போடும் ஸ்டாலின் ஏன் கிருஷ்ணஜெயந்திக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை….

கிருஷ்ணரின் பிறந்த நாளான ஜன்மாஷ்டமி நாட்டின் பல்வேறு பகுதிகளில் மட்டுமில்லாமல் பங்களாதேஷ் ,பாகிஸ்தான் ,பிஜு போன்ற நாடுகளிலும் அவரது பிறந்த இடம் மதுராவிலும் இந்த விழா மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது.

விஷ்ணுவின் எட்டாவது அவதாரம் என்று நம்பப்படும் கிருஷ்ணரின் பிறப்பை நினைவுகூரும் வகையில் இந்தியா முழுவதும் கொண்டாடப்படும் ஒரு பெரிய திருவிழா தான் ஜன்மாஷ்டமி. இந்த திருவிழாவை கிருஷ்ணா ஜன்மாஷ்டமி, கிருஷ்ணாஷ்டமி, கோகுலாஷ்டமி, அஷ்டமி ரோஹினி, ஸ்ரீகிருஷ்ணா ஜெயந்தி மற்றும் ஸ்ரீ ஜெயந்தி என்றும் அழைக்கப்படுகிறார் .

திமுகவில் 90% இந்துக்கள் இருப்பதாக தெரிவித்துள்ள திமுக இதுவரை எந்த இந்துக்கள் பண்டிகைக்கும் வாழ்த்துக்கள் சொல்வதில்லை, மாறாக மற்ற மத பண்டிகைகளுக்கு முக்கியமாக ரம்ஜான் ,கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகைகளுக்கு மட்டும் வாழ்த்து செய்தி கூறுவதுடன் விழாவிலும் பங்கேற்கின்றனர், இந்த சூழலில் இன்று இந்தியா முழுவதும் கிருஷ்ண ஜெயந்தி கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

இந்த நிலையில் இதுவரை தமிழகத்தில் பலமுறை ஆட்சியில் இருந்த கட்சியான திமுக ஒரு முறை கூட கிருஷ்ண ஜெயந்திக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை, மாறாக கிருஷ்ணரை திமுக கூட்டணியில் இருக்கும் திக போன்ற இயக்கங்கள் மிகவும் தரக்குறைவாக விமர்சிகின்றன. கடந்த சட்டமன்ற தேர்தலின் போது சர்ச்சைக்குரிய வகையில் கிருஷ்ணரை விமர்சனம் செய்தார் திராவிட கழக தலைவர் வீரமணி.
அதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பயது அனைவருக்கும் தெரிந்ததே , தேர்தலில் திமுக வெற்றி பெற்ற பிறகு கிருஷ்ணரை விமர்சனம் செய்ததால்தான் திமுக மிக பெரிய வெற்றி அடைந்ததாக தெரிவித்தார்.

இந்த சம்பவம் கிருஷ்ணரை குல தெய்வமாக வழிபடும் குறிப்பிட்ட சமூகத்தினர் மற்றும் இந்துக்கள் இடையே மிகுந்த கொந்தளிப்பை உண்டாக்கியது. சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்டத்தில் திமுகவின் ஆணிவேராக திகள்பவர்கழும் அவர்களே. அதிலும் பல ஆண்டுகளாக திமுகவில் முக்கிய பொறுப்பில் இருக்கும் பெரிய கருப்பன் மற்றும் ராஜ் கண்ணப்பன் போன்ற முன்னாள் அமைச்சர்கள் கூட சொந்த சமூகம் உணர்வின் பின்னால் நிற்காமல் புறக்கணிப்பது அவர்களை மிகுந்த வேதனையில் ஆழ்த்தியுள்ளது.

மற்ற மத பண்டிகைகளுக்கு வாழ்த்து தெரிவித்து இப்படி தொடர்ந்து இந்து பண்டிகைகளை புறக்கணிக்கும் திமுக தலைவர் ஸ்டாலின் ஒட்டு மொத்த இந்துக்களை மிகவும் வேதனையில் ஆழ்த்தியுள்ளார்.

இந்த நல்ல நாளில், உங்கள் அன்புக்குரியவர்களுக்கு நேர்மறையான மற்றும் ஊக்கமளிக்கும் செய்திகளையும் வாழ்த்துக்களை பகிருகிங்கள் , இதனால் அவர்கள் அனைத்து பிரச்னையிகளையும் கையாள்வதில் வலிமை பெறுவார்கள்.

Exit mobile version