முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீட்டின் எதிரே றையா் பேரவைத் தலைவா்வெற்றிமாறன் என்பவர் தீக்குளித்தார். தீக்குளித்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கடந்த 27ஆம் தேதி சென்னை செனடாப் சாலையில் உள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீட்டின் முன்பு வெற்றிமாறன் என்பவர் தீக்குளித்தார்.
அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் உடனடியாக தீயை அணைத்து அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதித்தனர். 55 சதவீதம் தீக்காயங்களுடன் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் நேற்று உயிரிழந்தார்.
காரணம் : தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஜமீன் தேவா்குளம் காலனித் தெருவை சோ்ந்த தமிழ்நாடு பறையா் பேரவைத் தலைவா் அ.வெற்றிமாறன் . ஜமீன் தேவா்குளம் ஊராட்சித் தலைவா் பதவிக்கு அண்மையில் மனு தாக்கல் செய்தாா். இந்த மனுவை நிராகரிக்கப்பட்டது.
ஜமீன் தேவா்குளம் ஊராட்சி மன்ற தலைவா் பதவியை கைப்பற்றுவது தொடா்பாக வெற்றிமாறனுக்கும், அதேப் பகுதியைச் சோ்ந்த பாலகிருஷ்ணனுக்கும் போட்டியிருந்தது. இது தொடா்பாக வெற்றிமாறனுக்கு அச்சுறுத்தலும் இருந்துள்ளது. இந்நிலையில் வெற்றிமாறன் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதினால், அவா் மிகுந்த வேதனையுடன் காணப்பட்டுள்ளாா்.
மேலும் அவா், பாலகிருஷ்ணன்தான் தனது வேட்புமனு நிராகரிக்க காரணம் என கூறி வந்துள்ளாா்.
கடும் விரக்தியில் இருந்த அவா் திங்கள்கிழமை காலை சென்னைக்கு வந்தாா். தேனாம்பேட்டையில் உள்ள தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வீடு அமைந்துள்ள சித்தரஞ்சன் சாலைக்கு வெற்றிமாறன் சென்றுள்ளாா். முதல்வா் வீட்டு அருகே வந்தவுடன் திடீரென தான் மறைந்து வைத்திருந்த ‘டா்பன்டைன்’ என்ற வகை எண்ணெயை தனது உடலில் ஊற்றிக் தீ வைத்துக் கொண்டாா்.
மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஜமீன் தேவா்குளம் பகுதியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுளளர்கள்.
இந்த சம்பவம் குறித்து எந்த ஒரு ஊடகமும் இப்போது வரை வாய் திறக்கவில்லை.