தலைநகர் புது டில்லியில் பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்குவதற்கு அரசு பங்களா ஒதுக்கப்படுவது வழக்கம். பலமுறை எம்.பி.,யாக இருந்தவர்களுக்கு தனி பங்களாவும், புதிதாக வந்தவர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பிலும் அரசு தரப்பிலிருந்து வீடு தரப்படும்.
இது போல சில ஆண்டுகளுக்கு முன், காங்கிரஸ் காலத்தில் எல்லாம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் அரசு பங்களாக்களை பலர் வாடகைக்கு விட்டு பணம் வாங்கிக் கொண்டிருந்தனர். தமிழக எம்.பி.,க்கள் டில்லி சென்று அதிகம் தங்குவதில்லை. தமிழக மக்கள் பிரச்சனைகளை எடுத்து டெல்லி செல்வது கிடையாது.
தமிழகத்தில் தங்கள் கம்பெனிகளில் வேலை செய்யும் பணியாளர் கொலை வழக்கிலிருந்து தப்பிக்க தலைமறைவு பின் சரண் என தி.மு.க எம்.பிக்கள் எப்போதும் பிசியாக உள்ளார்கள். அதற்கே அவர்களுக்கு நேரம் இல்லை. பின்னர் எப்படி டெல்லி செல்வார்கள்.
மோடி ஆட்சி வந்த பிறகு அரசு வீட்டை வாடகைக்கு கொடுப்பது குறைந்துவிட்டது.இருப்பினும், இரண்டு தமிழக திமுக எம்.பி.,க்கள் தங்கள் வீடுகளை வாடகைக்கு விட்டுள்ளனர்.
இந்த விஷயம் லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லாவிற்கு தெரிந்ததும் கடுமையாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார். அப்படி நடவடிக்கை எடுத்தால் பத்திரிகைகளில் செய்தி வெளியாகி கட்சிக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தும் என்பதால், அந்த இரண்டு தி.மு.க எம்.பி.,க்களும் வாடகைக்கு இருப்பவர்களை வெளியேற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















