திமுக ஆட்சியில் தனி மனிதனுக்கு பாதுகாப்பு இல்லை என பரவலாக பேசப்படுவது வழக்கம். அவர்கள் கட்சி நிர்வாகளுக்கே பாதுகாப்பில்லை என்பது நிதர்சனம். எங்கு பார்த்தாலும் கொலை கொள்ளை நடந்தேறுவது மட்டுமல்ல தமிழகத்தில் சட்டஒழுங்கு சரியில்லை என்பது தினம் தோறும் நடக்கும் கொலை கொள்ளை சம்பவங்கள் காட்டுகிறது.
மேலும் திமுகவின் உட்கட்சி பூசலால் ஆங்காங்கு கத்திக்குத்து ரவுடிசம் போன்ற சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. இதுபோன்ற சம்பவம் கோவை செல்வபுரம் பகுதியில் ந்டைபெற்றது அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் செல்வபுரம் பகுதியை சார்ந்த சன் ரைஸ் சுரேஸ் மற்றும் கேபிள் மணி ஆகிய திமுகவில் இருப்பவர்கள். இவர்களுக்கு பதவி போட்டி காரணமாக முன் விரோதம் இருந்துள்ளாது.இதன் காரணமாக நேற்று இருவருக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டது. அப்போது. கேபிள் மணி என்பவர் சுரேசை தாக்கியுள்ளார்.
இதனையடுத்து நேற்று செல்வபுரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் செல்வபுரம் காவல்துறை வழக்குப்பதிவு விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில் நேற்று மாலை அங்குள்ள ஹவுசிங் போர்ட் பகுதியில் நண்பர்களுடன் கேபிள் மணி பேசிக்கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே இருசக்கர வாகனத்தில் மர்ம நபர்கள் கேபிள் மணியை கத்தியால் நெஞ்சில் குத்தி கிழித்தும், கையில் கத்தியால் கீறியும் சென்றனர்.
படுகாயம் அடைந்த கேபிள் மணியை அருகில் இருந்தவர்கள் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக மீண்டும் வழக்குப்பதிந்த போலீசார், அங்கு உள்ள சி.சி.டி.வி காமிராவில் பதிவான காட்சிகளை கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















