‘மீண்டும் பிறந்து வர மட்டாரா? கோவில்களை மீட்டெடுக்க மாட்டாரா?’ பண்புக்குரிய தாய்த் தமிழ்நாட்டின் பந்தங்களே… அன்புக்குரிய தாமரைக் குடும்பத்தின் சொந்தங்களே…..
அனைவருக்கும் வணக்கம்.“தேசியத்தையும் தெய்வீகத்தையும்” தன் இரண்டு கண்களாகக் கொண்டு வாழ்ந்த தீவிரமான முருக பக்தர் பசும்பொன் தேவர் திருமகனார்.தேவர் திருமகனாரின் உயிர் பிரியும் வேளையில், அவர் இறுதியாகச் சொன்ன வார்த்தைகள் ”முருகா, இந்த உலகத்தின் ஏழை மக்களைக் காப்பாற்று” என்பதாகும்.அந்த அளவிற்கு ஏழை மக்கள் மீதும் தெய்வத்தின் மீதும் மாறாத அன்பையும் நம்பிக்கையையும் வைத்திருந்தார் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்கள்.“நீறில்லாத நெற்றி பாழ்” என்று வீரத்துடன் முழங்கியதோடு மட்டுமல்லாமல் நெற்றி துலங்க திருநீறை அள்ளிப் பூசிய நம் தேவர் திருமகனார் இன்று திருநீற்றை அவமதிப்பதை அனுமதித்திருப்பாரா?
இந்தியா முழுமையிலும் உள்ள பல்வேறு திருக்கோயில்களுக்கு நேரில் சென்று வழிபாடும் பூசைகளும் செய்த பெருமைக்குரியவர் தேவர் அவர்கள். ஆனால் இன்று தமிழகத்தில் உள்ள திருக்கோவில்கள் நம்பிக்கையற்றவர்கள் கரங்களில் நசுக்கப்படு வதைப் பார்த்துக் கொண்டுதான் சும்மா இருந்திருப்பாரா?கோவில் நகைகளை எல்லாம் கொண்டு சென்று உருக்குவதற்குத்தான் அனுமதித்திருப்பாரா?மதுரை மீனாட்சி அம்மன் கோவில் புனிதத்தை மதிக்காமல் மீனாட்சி அம்மனை ஒருமையில் பேசிய ஒரு கட்சித் தலைவர் தலைமறைவு வாழ்க்கை வாழவேண்டிய அவலத்துக்கு தள்ளப்பட்டார். அந்த அளவுக்கு தெய்வீக வீரம் மிக்கவர் தேவர் திருமகன்.
கடவுளை மறுத்துப் பேசிய எவருக்கும் மதுரையில் தேவர் திருமகனாரின் மண்ணில் சென்று பேச துணிவு எக்காலத்திலும் வந்ததில்லை.இக்காலத்தில் தேவர் திருமகனார் போற்றி வணங்கிய தேசபக்தியும் தெய்வபக்தியும் இல்லா தவர்கள், அதிகாரத்தின் துணையோடு தேசத்தையும் தெய்வீகத்தையும் தொடர்ந்து நிந்தனை செய்து கொண்டே இருக்கிறார்கள். தேசத்தின் ஒருமைக்கும், தெய்வத்தின் பெருமைக்கும் எதிராகச் செயல்படுவதைத் தன் சாதனையாகச் சொல்லிப் பெருமைப்படுகிறார்கள்.தேவர் திருமகனார் இல்லை என்ற துணிவினால், தேவரின் ஒவ்வொரு கொள்கையையும் தீவிரமாக எதிர்க்கும் அவர்கள் எந்த அடிப்படையில் தேவருக்கு மரியாதை செய்ய வருகிறார்கள்?
கடவுளைப் பழித்தவர்களையும், கடவுளின் பிரசாதம் ஆகிய திருநீற்றை அவமதித்தவர்களையும், தேவர் அவர்கள் உயிருடன் இருந்திருந்தால், ஓட ஓட விரட்டி இருப்பார்.தேவரின் வழி வந்த வீரம், வீணாகப் போகலாமா? தொடர்ந்து கடவுள்களை நிந்தனை செய்பவர்களும், கடவுளை இழித்து, அவமதித்துப் பேசுபவர்களும், தேர்தல் ஓட்டுகளுக்காக ஒரு சாராரை உயர்த்தியும் மற்றொரு சாராரைத் தாழ்த்தியும் பேசிக் கொண்டு வருவதை கேட்டவுடன் தேவர் அவர்கள் வெகுண்டெழுந்து இருக்க மாட்டாரா?“தேசியமும் தெய்வீகமும் எனது இரு கண்கள் என்று வாழ்ந்த தேவர் திருமகனார் மீண்டும் பிறந்து வரமாட்டாரா…? தமிழகத்தில் கோவில்களை மீட்டெடுக்க மாட்டாரா….?
“ என்று என் மனம் ஏங்குகிறது.தேவர் அவர்களைத் தெய்வமாகக் கொண்டாடும், தமிழக மக்களே, நீங்கள்தான் தமிழக திருக்கோவில்களின் காவல் தெய்வங்கள். இன்றே உறுதி எடுப்போம் தமிழக திருக்கோவில்களில் அதன் நடைமுறைகளை தேர்ந்தெடுக்கப்பட்ட அறங்காவலர்கள் தீர்மானிக்கட்டும்.இதுவே தேவர் அவர்களுக்குச் செய்யப்படும் உண்மை யான பூசை.
அவர் வழியில் நிறுத்த ஏற்கும் சபதமே அவருக்கு காட்டும் நன்றிதேசத்தின் ஒருமைக்கும், தெய்வத்தின் பெருமைக்கும் எதிராகச் செயல்பட்டு, ஆலயங்களைப் புறக்கணிக்கும், தெய்வ நிந்தனைகளைத் தொடரும் இந்த காலத்தில் நம் தேவர் திருமகனார் இருந்திருக்கக் கூடாதா என்று நான் எண்ணிப் பார்க்கிறேன்.அந்த மாபெரும் தெய்வ சக்தியாக விளங்கி நம்மை எல்லாம் வாழ்வித்துக் கொண்டிருக்கும் மனிதருள் மாணிக்கத்தை, தேவர் திருமகனாரை வணங்கி மகிழ்கிறேன்.நன்றி வணக்கம்.அன்புச் சகோதரன் அண்ணாமலை என தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















