சிறையிலிருந்து தண்டனைக்காலம் முடியும் முன் யார் யாரை விடுதலைச் செய்யலாம், யார் யாருக்கு தகுதி, யார் யாருக்கு தகுதி இல்லை என்கிற அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதில் பெண்களுக்கு எதிரான குற்றம், ஊழல் வழக்குகளில் சிக்குபவர்கள், தீவிரவாத நடவடிக்கையால் கைதானவர்கள், குண்டுவெடிப்பு வழக்கில் கைதானவர்கள் கட்டாயம் விடுதலை இல்லை என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எழுவர் விடுதலை கோரும் வழக்கில் அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டதே குண்டுவெடிப்பில் ராஜீவ் கொல்லப்பட்ட வழக்கில் தான். அதேபோல் கோவை குண்டு வெடிப்பில் கைதாகி பத்தாண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருப்பவர்கள் விடுதலை செய்ய கோரிக்கை வைக்கின்றனர். புதிய அரசாணையின்படி இவர் விடுதலையாகவே முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இது திமுகவிற்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இஸ்லாமியர்கள் முதல்வர் மு.கஸ்டாலினை நேரில் சென்று கோவை குண்டு வெடிப்பு வழக்கில் கைதாகி அதிக நாள் சிறையில் உள்ளவர்களை விடுவிக்க கோரிக்கை வைத்தார்கள். ஆனால் தற்போது அவர்களின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுளது. இதில் அரசியல் செய்வதற்கு தினகரன் இறங்கிவிட்டார். மேலும் நகராட்சி மாநகராட்சி தேர்தல் வர உள்ள நிலையில் இது இஸ்லாமியர்களின் காவலராக காட்டி கொள்ளும் திமுகவிற்கு இது பெரும் இடியாக அமைந்துள்ளது.
திமுக அரசு பாஜக அரசின் வழிகாட்டியாகவே செய்ல்படுகிறது என்பதை இந்த சம்பவம் நன்றாக உணர்த்துகிறது என பல ஜாமத்தில் பேச ஆரம்பித்துவிட்டார்கள். பாஜக தான் நினைத்தை திமுகவை வைத்து நிறைவேற்றிவிட்டதாகவும் அவர்கள் கூறுகிறார்கள். மேலும் தமிழகம் முழுவதும் உள்ள ஜாமத் நிர்வாகிகள் இந்த அரசாணை குறித்து ஆலோசனை நடத்தியுள்ளார்கள். திமுக அதரவு நிலைப்பாட்டில் உள்ள இஸ்லாமிய கட்சிகள் மற்றும் அமைப்புகள் இது குறித்து வாய்திறக்கவில்லை. இது வரும் தேர்தல்களில் எதிரொலிக்கும் என ஜமாத் நிர்வாகிகள் கூறினார்கள்.
அரசாணை வெளியீடு:
- இந்திய அரசியலமைப்பின் 161வது பிரிவின்படி, விடுதலை செய்வதற்கான விதிமுறைகள் வெளியிடப்படுகின்றன
- இந்தாண்டு செப்., 15 நிலவரப்படி, 10 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தவர்கள், குறிப்பாக நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்டு, மேல்முறையீட்டு நீதிமன்றத்தால் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டவர்கள், சில கட்டுப்பாடுகளின் கீழ், முன்னதாக விடுதலை செய்யப்படலாம்
- பாலியல் பலாத்காரம், மோசடி, வழிப்பறி, கொள்ளை, பயங்கரவாத குற்றங்கள், மாநிலத்துக்கு எதிரான குற்றம், சிறையில் இருந்து தப்பிக்க முயற்சித்த குற்றம், கள்ள நோட்டு தயாரித்தல், பெண்களுக்கு எதிரான குற்றம் புரிந்தவர்கள், வரதட்சணை மரணம், பொருளாதார குற்றங்கள், கள்ளச்சந்தை, கடத்தல்.
அதிகாரத்தை தவறாக பயன்படுத்துதல், விஷம் கலந்த சாராயம் விற்றல், வனம் தொடர்பான குற்றங்களில் தொடர்ச்சியாக ஈடுபடுவோர், ஒன்றுக்கு மேற்பட்டவர்களை கொலை செய்து ஆயுள் தண்டனை பெற்றவர்கள், ஜாதி மற்றும் மத வன்முறையில் ஈடுபட்டவர்கள் போன்றோர், முன்னதாக விடுதலை செய்ய தகுதியற்றவர்கள் - அதேபோல, ஊழல் ஒழிப்பு சட்டம், போதை தடுப்பு சட்டத்தின் கீழ் தண்டனை பெற்றவர்கள், இதர வழக்குகள் நிலுவையில் உள்ளவர்கள் போன்றோருக்கும், முன்னதாக விடுதலை அளிக்கக் கூடாது
- இது தவிர, 20 ஆண்டுகள் சிறை தண்டனை முடித்தவர்களையும், இதே கட்டுப்பாடுகளின் கீழ் முன்னரே விடுதலை செய்யலாம். அவ்வாறு விடுதலை செய்யப்படுவோரிடம், அதற்கான உறுதிமொழி பத்திரம் வாங்க வேண்டும்
- முன்னதாக விடுதலை என்பதை, ஆயுள் தண்டனை கைதிகள் உரிமையாக கருத முடியாது
- அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு வருவோருக்கு மட்டும், முன்னரே விடுதலை அளிக்கப்பட வேண்டும். இந்த சலுகை நீட்டிக்கப்படக் கூடாது
- விதிமுறைகளின்படி, முன்னதாக விடுதலை அளிக்கப்படுவதை, மாநில அளவில் டி.ஜி.பி., அல்லது சிறைத்துறை தலைவர், சிறைத்துறை தலைமையிடத்து டி.ஐ.ஜி., உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் ஆய்வு செய்ய வேண்டும். அதற்கு முன்னதாக, மாவட்ட அளவில் மத்திய சிறை கண்காணிப்பாளர் தலைமையிலான குழுவினர், ஆய்வு செய்து அனுமதி அளிக்க வேண்டும்
- மண்டல அளவில், மண்டல சிறைத்துறை டி.ஐ.ஜி., உள்ளிட்ட அதிகாரிகள், மாவட்ட அளவிலான குழுவின் பரிந்துரைகளை ஆய்வு செய்து, தகுதியானவர்கள் பட்டியலை மாநில அளவிலான குழுவுக்கு அனுப்ப வேண்டும்.
இறுதியாக, டி.ஜி.பி., அல்லது சிறைத்துறை டி.ஜி.பி., உரிய விதிகளின்படி, ஒவ்வொரு வழக்கிலும் விதிமுறைகளின்படி முடிவெடுத்து, அரசின் பரிந்துரைக்கு அனுப்ப வேண்டும்.
இவ்வாறு அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.