அதிர்ச்சி செய்தி !
கேரளாவில் உள்ள காவல் துறையில் உளவாளியாக பல்வேறு மாநிலங்களில் தடைசெய்யபட்ட PFI & SDPI போன்ற இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகளில் சார்பு நபர்கள் ஊடுருவி உள்ளனர் அவர்கள் ஆர்எஸ்எஸ் தலைவர்கள் இருக்கும் இடத்தை பகிர்ந்துள்ளனர்.
ஆர்எஸ்எஸ் தலைவர்கள் பற்றிய கேரள காவல்துறை தனிப்பட்ட தகவல்களை பாதுகாப்பு காரணங்களுக்கு சேகரித்து வைத்துள்ளனர்.அதை பல்வேறு மாநிலங்களில் தடை செய்யப்பட்ட PFI ,SDPI போன்ற இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகளுக்கு கசிய விட்டதாக கேரள பத்திரிக்கையான ஜென்மபூமி 25/12/21 முதல் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளது.
இதுவரை 135 ஆர்எஸ்எஸ் தலைவர்கள் தனிப்பட்ட தகவல்கள் பகிரப்பட்டு உள்ளதாக தெரிகிறது,சமீபத்தில் கேரள அரசு போக்குவரத்து துறையில் பணியாற்றும் நடத்துனரை PFI கும்பல் பேருந்தில் இருந்து வெளியே இழுத்து சென்று அவரது குழந்தைகள் முன்பு கொடூரமாக தாக்கியது.
இந்த சம்பவம் குறித்து விசாரணை செய்ததில் காவல் துறையில் PFI உளவாளிகள் இருப்பது தெரியவந்துள்ளது,
காவல்துறையில் இஸ்லாமிய அடிப்படைவாதிகள் இருப்பது புதிய நிகழ்வு அல்ல,2018 ஆம் ஆண்டில் காவல்துறை வட்டாரங்களில் பச்சை விளக்கு என்ற வாட்ஸ் அப் குழு இயங்கி வந்துள்ளது இது ஜிஹாதி நடவடிக்கைகள் சம்பந்தமாக பரப்புரையை மிக ரகசியமாக செய்து வந்துள்ளன,முஸ்லிம் அல்லாத பெண்களை காதல் என்கிற போர்வையில் லவ் ஜிகாத் என்ற பெயரில் இஸ்லாமிய அடிப்படைவாதிகள் செய்யும் செயல்களுக்கு பெற்றோர்கள் காவல் நிலையம் சென்றால் அதற்கு அவர்கள் உதவுவது கிடையாது என்பது பல நீதிமன்ற வழக்குகளில் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது, காவல் துறையிலும் இஸ்லாமிய அடிப்படைவாதிகள் ஊடுருவி உள்ளனர் என்பது தெரியவருகிறது.
கேரள பாரதிய ஜனதா கட்சித் தலைவர் சுரேந்திர ஜி சமீபத்தில் பேட்டியின் போது..
ஆம்புலன்ஸ் சேவை என்கிற பெயரில் பயங்கரவாதிகளை இடமாற்றம் செய்வதற்கும், படுகொலைகள் நடப்பதற்கும் துணை போகிறது என்று கூறியுள்ளார், அதற்கு தகுந்தார்போல் மூன்று நாட்களுக்கு முன் ஆம்புலன்சில் வைத்து பிடிபட்ட பயங்கரவாதிகள் என்று சமூக வலைத்தளங்களில் காணொளி ஒன்று வலம் வந்தது அது உண்மை என்ற செய்தி தெரியவந்துள்ளது.இப்படியாக ஆம்புலன்சை வைத்து படுகொலைகளை செய்வதும் அதை வைத்து குற்றவாளிகளை இடம் மாறுவதற்கும் காவல்துறையில் உள்ள இஸ்லாமிய அடிப்படைவாதிகள் உதவி புரிகின்றனர் என்று தெரிகிறது.
இது கேரளத்தில் நடந்த சம்பவம்.நம் தமிழகத்திலும் இது போன்ற நிகழ்வுகள் நடக்க ஆரம்பித்துள்ளன,நடந்துள்ளனதென்காசி மாவட்டம் குமார் பாண்டியன் மற்றும் 3 சகோதரர்களின் படுகொலை இதேபோன்று ஆம்புலன்ஸ் வைத்து நடந்த பயங்கரவாத செயல் குரோனா காலக்கட்டத்தில் பல்வேறு இடங்களில் சவுதியில் தடை செய்யப்பட்ட தப்லீக் ஜமாத் அமைப்பினரை தொற்று அதிகரிக்காத வகையில் அரசு நடவடிக்கைகளில் ஆம்புலன்சில் வைத்து பிடித்துள்ளனர்,சமீபத்தில் ஜார்ஜ் பொன்னையா என்கிற கிறிஸ்தவ பாதிரியார் ஆம்புலன்சில் செல்லும் போது மதுரையில் வைத்து கைது செய்யப்பட்டார்,இப்படி ஏராளமான உதாரணங்கள் தமிழகத்திலும் உள்ளன.
ஆக ஹிந்து விரோதிகள் தேசத்துக்கு எதிராக செயல்படக் கூடியவர்கள் ஆம்புலன்ஸ் என்கிற உன்னதமான உயிர் காக்கும் வாகனத்தை தவறான செயல்களுக்கு பயன்படுத்தி வருவது தமிழகத்திலும் அதிகரித்துள்ளது.
1) கேரளத்தில் காவல்துறையில் ஊடுருவியுள்ள இஸ்லாமிய அடிப்படைவாதிகள் PFI & SDPIபோன்ற பல்வேறு மாநிலங்களில் தடை செய்யப்பட்ட அமைப்புக்கு அவர்களுடைய ஜிகாத் நோக்கத்தை நிறைவு செய்வதற்காக வேலை செய்து வருகின்றனர் என்பது இந்த செய்திகள் மூலம் தெரிய வருகிறது.தமிழகத்திலும் இதே சூழ்நிலை உள்ளது.
2) இதை செயல்படுத்துவதற்கு ஆம்புலன்ஸ் வாகனத்தை பயன்படுத்துகின்றனர்.அரசு துறைகளிலும் ஊடுருவி தேசத்துக்கு எதிராக பயங்கரவாத செயல்களை செய்வதற்கு முடிவெடுத்துள்ளனர் என்று தெளிவாகிறது.அவசரகால ஆம்புலன்ஸ் போன்ற வாகனங்களுக்கு கடுமையான விதிமுறைகளுடன் GPS கருவி அவசியம் கட்டாயம் பொருத்தப்பட வேண்டும்.என்றும் இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகள் இயக்கிவரும் போலியான சேவை என்கிற பயங்கரவாத செயலுக்கு துணைபோகும் ஆம்புலன்சை தடை செய்ய வேண்டும் என்றும் தேசபக்தர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.
கட்டுரை :- பொதுநல சிந்தனையாளர் செல்வா நாயகம்.