அரசு பால்பண்ணைப் பங்குகளைத் தனியாருக்கு விற்பதை எதிர்த்துக் காங்கிரசின் ஆதிர் ரஞ்சன் தொடுத்த வழக்கில், தனியார் நிறுவனத்துக்கு ஆஜராக வந்த ப.சிதம்பரத்தைக் காங்கிரஸ் கட்சியினர் முற்றுகையிட்டதால் அவர் திரும்பிச் சென்றுவிட்டார்.
மெட்ரோ டைரியின் பங்குகளைக் கெவன்டிர்(Keventer) என்னும் தனியார் நிறுவனத்துக்கு விற்க மேற்கு வங்க அரசு முடிவு செய்தது.
இதை எதிர்த்து மாநில காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளார். இந்த வழக்கில் தனியார் நிறுவனத்துக்கு ஆதரவாக ஆஜராக வந்த முன்னாள் மத்திய அமைச்சரும் வழக்கறிஞருமான ப.சிதம்பரத்தைச் சுற்றி வளைத்துக் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் முழக்கமிட்டனர்.
இதனால் அவர் நீதிமன்றத்துக்குச் செல்ல முடியாமல் மீண்டும் காரில் ஏறித் திரும்பிச் செல்ல வேண்டியதாகி விட்டது.