கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்து திருநாவலூரில் உள்ள தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்ட தெலுங்கானா மாநில ஆளுநரும் புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தர்ராஜன் படித்து பட்டம் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பட்டத்தை அளித்து அவர்களை பாராட்டி கௌரவித்து.
பின்பு நிகழ்ச்சியில் பேசுகையில் :- படித்த இளைஞர்கள் இன்ஜினியர் ஆகணும் டீச்சராக ஆகணும் டாக்டர் ஆகனும் நடிகர் ஆகணும் ஆனால் அரசியல் வாதியாகனும் யாரும் சொல்லி கேள்விப்பட்டதில்லை.ஆனால் அவர்களுக்கு அரசியல் தேவை என்பது என ஆழமாக கருதுகிறேன் ஆளுநர் அரசியல் பேசக்கூடாது ஆனால் ஆளுநர் இளைஞர்களை நேர்மையான அரசியலுக்கு வாருங்கள் என்று அழைக்கலாம் நல்லவர்களும் படித்தவர்களும் அரசியலை விட்டு ஒதுங்கி இருந்தால் அரசியல் எப்படி இருக்கும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
ஆனால் எல்லோரும் குடும்ப வாழ்க்கையில் எப்படி படிக்கிறீர்கள் அதேபோல் திருமணமும் சரியான நேரத்தில் செய்து கொள்ள வேண்டும் நான் படிக்கிறேன் நான் வேலை தேடுகிறேன் என்பதற்காக திருமணத்தைத் தள்ளிப் போடாதீர்கள் அப்பா அம்மா தேர்ந்தெடுத்து கொடுத்தாலும் நல்லது ஆனால் நாமலே பெண்ணை தேர்ந்தெடுத்தாலும் அப்பா அம்மா ஒப்புதலோடு திருமணத்தை செய்து கொள்ள சின்ன கோரிக்கையாக வைக்கிறேன் இன்றைய சூழ்நிலையில் இளைஞர் அரசியல் நமக்கானது என்று நிர்ணயிக்க கூடாது அரசியல் இளைஞர்களுக் தான் அது நேர்மையான அரசியலில் இளைஞர்கள் ஈடுபட வேண்டும் படித்தவர்கள் அதிகமாக அரசியலுக்கு வர வேண்டும் அரசியல் மிகவும் பண்படும் அரசியலில் பல தலைவர்கள் உருவாகும்போது இந்த அரசியல் பாமர மக்களுக்கான அரசியலாக மாறும் என கூறினார்.
இதனை தொடர்ந்து பேரறிவாளன் விடுதலை குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த அவர் தமிழ்நாடு தனது ஆளுமைக்கு உட்பட்டது இல்லை என்பதால் அந்த விவகாரத்தில் தன்னால் பதில் கூற முடியாது என்றும் நீதிமன்றம் விவகாரத்தில் தான் தலையிட விரும்பவில்லை என்றும் கூறினார் தொடர்ந்து பல்கலைக் கழகத் துணைவேந்தரை நியமிக்கும் அதிகாரம் முதல்வருக்கு உண்டு என்ற தமிழக அரசின் நிலைப்பாடு குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்தவர் துணைவேந்தர் விவகாரத்தைப் பொருத்தமட்டில் ஆளுநருக்கு தான் அதிக அதிகாரம் உள்ளதாகவும் முதல்வருடன் இணக்கமாக இருக்கும் மாநிலங்களில் எந்த பிரச்சனையும் இல்லாமல் துணைவேந்தர் பணி நியமனம் இருந்து வருவதாகவும் கூறினார்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















