குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்திவரும் இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக பல்வேறு இஸ்லாமிய நாடுகள் ஆதரவு தெரிவித்தன.
இங்கிலாந்து நாட்டில் நடைபெற்ற CAAவிற்கு ஆதரவான போராட்டத்தில் கலந்து கொண்ட இங்கிலாந்தை சேர்ந்த பெண், இந்தியாவிற்கு எதிராக பேசும் உலக நாடுகளையும்,உள்நாட்டு அரசியல்வாதிகளையும் வெளுத்து எடுத்துள்ளார்.
இந்தியாவின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிடும் உலக நாடுகள், பாகிஸ்தான், பங்களாதேஷ் நாடுகளில் இந்து பெண்கள் கற்பழிக்கபடுவதும், எந்தவித பயமுமின்றி மதமாற்றத்தில் ஈடுபடுவதை யாரவது வாய் திறந்தனரா ?.
இந்துக்கள் என்ன அனாதையா. அவர்களுக்கு என்று ஒரு பாதுகாப்பான நாடு தேவையில்லையா,எனவும் அவர் பேசினார்.தற்போது உலக அளவில் CAA விற்கு ஆதரவாக பேசிய இளம்பெண்ணின் வீடியோ வைரலாகி வருகிறது,உலக அளவில் இந்தியாவின் நடவடிக்கைக்கு ஆதரவுகள் பெருகி வருகின்றன.
இந்தியாவில் உள்ள சில அரசியல் கட்சிகளே CAA குறித்த விழிப்புணர்வு இல்லாமல் எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுவரும் வேளையில்,எங்கோ வெளிநாட்டை சேர்ந்த பெண் ஒருவர் இந்தியாவிற்கும், இந்துக்களுக்கும் ஆதரவாக குரல் எழுப்பியது இந்தியர்கள் இடையே வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது,
இந்தியாவின் CAA குறித்து திட்டமிட்டு வதந்திகள் வெளிநாடுகளில் ஊடகங்கள் மூலம் பரப்பப்படும் வேளையிலும், இந்தியாவின் நடவடிக்கைக்கு ஆதரவாக வெளிநாட்டினை சேர்ந்த இளைஞர்கள் குரல் எழுப்புவது அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















