தமிழகத்தில் நேற்று 16 மாவட்ட கலெக்டர்கள் உட்பட 48 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டனர். ஐஏஎஸ்., தம்பதிகளான விஷ்ணு சந்திரன் – ஆஷா அஜித் ஆகியோர் ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்ட கலெக்டர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.இதன்படி, ராமநாதபுர மாவட்ட கலெக்டராக, நகராட்சி நிர்வாக இணை கமிஷனர் விஷ்ணு சந்திரன் நியமிக்கப்பட்டார். பக்கத்து மாவட்டமான சிவகங்கை மாவட்ட கலெக்டராக தமிழக தொழில்துறை வழிகாட்டி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஆஷா அஜித்தும் நியமிக்கப்பட்டு உள்ளனர். தற்போது, இவர்கள் இருவரும் கணவன் மனைவி என தெரியவந்துள்ளது.
2015ல் ஐஏஎஸ் முடித்த விஷ்ணுசந்திரன், தூத்துக்குடி, நாகர்கோயில் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணியாற்றி உள்ளார். திருச்செந்தூர் கோயில் நிர்வாக அதிகாரியாகவும், திருநெல்வேலி மாநகராட்சி கமிஷனராகவும் பதவி வகித்துள்ளார்.
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் கருநாகப்பள்ளியை சேர்ந்தவ ஆஷா அஜித், 2015 ஜூலையில் சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்றார். சிவகங்கை மாவட்டம், தேவக்கோட்டை, தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சப் கலெக்டராக பணியாற்றியுள்ள இவர், நாகர்கோயில் மாநகராட்சி கமிஷனராகவும் பதவி வகித்துள்ளார்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















