தமிழகத்தில் தற்போது நீட் தேர்வு குறித்த பிரச்சனையை கையில் எடுத்துள்ளது ஆளும் கட்சியான திமுக. இதற்கு பல காரணங்கள் உண்டு என்கின்றார்கள் அரசியல் விமர்சகர்கள். நாங்குநேரி சம்பவம் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் அமைச்சர் மீதான சொத்து குவிப்பு வழக்குகள் என பல இடியப்ப சிக்கலில் மாட்டி கொண்டுள்ளது திராவிட மாடல் அரசு.
இந்த நிலையில் தான் நீட் தேர்வு காரணமாக ஒரு ஜெகதீஸ்வரன் என்ற மாணவன் தற்கொலை செய்து கொள்கிறார்,அதனை தொடர்ந்து அவரது தந்தையும் தற்கொலை செய்து கொள்ள இந்த விவகாரத்தை கையில் எடுத்து தி.மு.க
திமுக அணி பிரிவுகள் சார்பில் உண்ணாவிரதம் போராட்டம் நடைபெற்றது. விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி தலைமையில் தமிழகம் முழுவதும் இந்த போராட்டம் நடைபெற்றது. போரட்டம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை என்பதே நிதர்சனம். ஆளும்கட்சி நடத்திய போராட்டமே தோல்வி என்பதால் இன்னும் அதை ஜீரணிக்க முடியாமல் தவித்து வருகிறார்கள் திமுகவினர்.
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் திமுக சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இதில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார். உண்ணவிரத போராட்டத்தின் இறுதியில் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
அப்போது ஆளுநர் குறித்து காட்டமாக பேசினார் நீங்கள் ஆர் என் ரவி அல்ல, ஆர் எஸ் எஸ் ரவி. ஆளுநருக்கு நான் சவால் விடுகிறேன்.நீங்கள் உங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தமிழகத்தில் ஏதோ ஒரு தொகுதியில் தேர்தலில் நிற்க முடிவு செய்யுங்கள். உங்களால் வெற்றி பெற முடியும் என்றால் மக்களை சந்தியுங்கள். அதன் பிறகு நீங்கள் சொல்வதை நான் கேட்கிறேன். என பேசினார்
உதயநிதிக்கு பதிலடி தரும் வகையில் பாஜக தலைவர் அண்ணாமலை ‛‛நீட் விவகாரத்தில் திமுக இடியாப்ப சிக்கலில் மாட்டிக் கொண்டுள்ளனர். இதனால் உதயநிதி என்னென்னமோ பேசி வருகிறார்.ஆளுநர் ஆர்.என்.ரவியை தேர்தலில் போட்டியிட சொல்லும் உதயநிதி ஸ்டாலின், எம்எல்ஏ பதவியை துறந்துவிட்டு யுபிஎஸ்சி முதன்மை தேர்வில் தேர்ச்சி பெறுவாரா? அல்லது டிஎன்பிஎஸ்சி, சிவில் சர்வீஸ் தேர்வு, குரூப் 4 தேர்வுகளில் ஆவது வெற்றி பெறுவாரா? எம்எல்ஏ பதவி, அமைச்சர் பதவியை விட்டுவிட்டு யுபிஎஸ்சி தேர்வில் நின்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெற்றி பெறட்டும். நான் என்னுடைய அரசியல் பதவியை விட்டு வெளியேறுகிறேன்” என்றார்.
இந்நிலையில் தான் அமைச்சர் உதயநிதி செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போதுசெய்தியாளர் ஒருவர், ‛‛குரூப் 4 தேர்வில் நீங்கள் வெற்றி பெற்றால் அரசியலை விட்டே விலகுவதாக அண்ணாமலை கூறியுள்ளாரே?” என்ற கேள்வியை கேட்டார். இதை கேட்ட உதயநிதி ஸ்டாலின் அமர்ந்திருந்த சேரில் இருந்து உடனடியாக எழுந்து வேகமாக சென்றார். இதுதொடர்பான வீடியோ தற்போது வெளியாகி இணையதளங்களில் பரவி வருகிறது.