கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள மீனவர் சமுதாய நல கூடத்தில், நடைபெற்ற ஆயுஷ்மான் பாரத் 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான தனி நபர் மருத்துவ காப்பீடு அட்டை வழங்கும் விழா நடைபெற்றது. இதில் பா.ஜ.க தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ கலந்து கொண்டு நலத் திட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் ;
ஆயுஷ் மான் பாரத் திட்டத்தின் மூலம் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 5 இலட்சம் ரூபாய் மருத்துவ காப்பீடு வழங்கப்பட்டு வருகிறது இத்திட்டத்தால் மக்கள் பயன்பெற சுகாதார துறை அதிகாரிகள் உடன் இணைந்து, இன்று முதல் முகாம் துவங்கி உள்ளோம், இந்த முகாம்களை கோவை தெற்கு தொகுதியில் ஒவ்வொரு பகுதியிலும் நடத்த திட்டமிட்டு உள்ளதாக தெரிவித்தார்.
பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலையின் என் மண், என் மக்கள் பயணம் முதற்கட்டத்தை நிறைவு செய்து, அடுத்த கட்டமாக மேற்கு மண்டலத்திற்கு வர உள்ளது, கோவையில் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் இந்த யாத்திரை நடைபெறும் அண்ணாமலையின் இந்த பயணம் மிகப்பெரிய எழுச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கோவை மாநகராட்சி பகுதிகளில் குப்பை எடுத்தால் மாமன்ற உறுப்பினர்கள் மிரட்டுகிறார்கள், போர்வெல் போட வசூல் செய்கிறார்கள்,வீடு கட்ட தனியாக பணம் வசூல் செய்கிறார்கள் என குற்றம் சாட்டிய அவர், கோவை மாநகராட்சி பகுதிகளில் லஞ்சம் கேட்டால், பொது மக்கள் புகார் அளிக்க ஹெல்ப் லைன் ஆரம்பிக்க முடிவு செய்து உள்ளோம் என்றார். அதற்கான தொடர்பு எண் இரண்டு நாளில் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
மேலும் திருமண விழாக்களில் மணமக்களை வாழ்த்துவதை தவிர மற்ற வேலைகளை முதல்வர் செய்கிறார் என சாடினார்.தி.மு.க விஞ்ஞான பூர்வமாக ஊழல் செய்யும் கட்சி என விமர்சித்தார். அப்பழுக்கற்ற பிரதமரை குறை சொல்ல தி.மு.க விற்கு தகுதியில்லை எனவும் பிரதமர் நேர்மையை விமர்சிக்க தி.மு.க விற்கு தகுதியில்லை எனவும் கூறினார்.
100 பேரில் 4 பேருக்கு தான் மகளிர் உரிமைத் தொகை வருகிறது, அனைத்து மகளிருக்கும் உரிமைத் தொகை கொடுக்க வேண்டும், அப்படி அறிவித்தால் நானே பூத்களில் அமர்ந்து அனைத்து மகளிருக்கும் உரிமைத் தொகை வாங்கி தருகிறேன் என தெரிவித்தார்.
சாதி ரீதியாக குழந்தைகள் மனதில் நஞ்சு விதைக்கிறார்கள் மாணவர்கள் வன்முறையை கையில் எடுத்து இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது, சமூக நீதி பேசும் திமுக போன்ற கட்சிகள் இனி இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க முன்வரவேண்டும்.
நீட் விஷயத்தில் போராடுமாறு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மக்களை தூண்டுகிறார், ஆட்சிக்கு வந்த பிறகு மக்களை போராட அழைப்பது வேடிக்கையான விஷயம். தி.மு.க அரசும், அமைச்சர்களும் நீட் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு உதவி செய்யாமல் தற்கொலைக்கு தூண்டுகிறார்கள் என்றார். அவர்கள் மீது பின் FIR பதிவு செய்யவேண்டும், தி.மு.க ஆட்சியில் நீட்க்கு பயிற்சி அளிக்கும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கிருக்கிறார்கள் எனத் தெரிவித்தார்
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















