இந்தியாவின் அதிநவீன வான் பாதுகாப்பு கவசமான ‘ஆகாஷ்தீர்’, அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகளை அதிர்ச்சியில் உறைய வைத்திருக்கிறது. இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் நடைபெற்றது. இந்த போரில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக சீனாவும் துருக்கியும் நேரடியாக களம் இறங்கின. துருக்கியின் சார்பில் அதிநவீன பைகார் யிஹா3 ரக ட்ரோன்கள் பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டன. லடாக், காஷ்மீர், பஞ்சாப், குஜராத், ராஜஸ்தான் எல்லைப் பகுதிகளில் நூற்றுக்கணக்கான துருக்கி ட்ரோன்கள் அலை, அலையாக வந்து தாக்குதல் நடத்த முயற்சி செய்தன. ஒரே நேரத்தில் சுமார் 1,000-க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் வானில் பறந்தன. அனைத்து ட்ரோன்களையும் இந்திய ராணுவம் நடுவானில் சுட்டு வீழ்த்தியது.
இதேபோல சீனாவின் சார்பில் அதிநவீன பிஎல்15 எல்ஆர் ரக ஏவுகணைகள் பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டன. இந்திய விமான படைத் தளங்களை குறிவைத்து சீன ஏவுகணைகள் அடுத்தடுத்து வீசப்பட்டன. இந்த ஏவுகணைகளையும் இந்திய ராணுவம் நடுவானில் வெற்றிகரமாக இடைமறித்து அழித்தது. மேலும் அமெரிக்காவின் F16 போட்டு தள்ளியது இந்தியா. ‘ஆகாஷ்தீர்’ என்ற வான் பாதுகாப்பு கவசம் எதிரி நாடுகளின் அனைத்து ட்ரோன்கள், ஏவுகணைகளையும் நடுவானில் துவம்சம் செய்தது. இது அமெரிக்கா, சீனா,, துருக்கி உள்ளிட்ட நாடுகளை அதிர்ச்சியில் உறைய வைத்திருக்கிறது.
இந்த நிலையில் இந்தியா தனது பவரை விரிவுபடுத்த தொடங்கியுள்ளது குறிப்பாக அமெரிக்காவுக்கு எதிராக சில ராஜதந்திர நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளது. இதன் முதல்படியாக ஆப்கானிஸ்தானின் மிகப் பெரிய ஏர்பேஸான பக்ராம் ஏர்பேஸை கைப்பற்ற இந்திய அரசு தலிபான்களுடன் பேசிக்கொண்டு இருக்கிறது. இது தற்போது அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் உள்ளது. 1950 களில் ஆப்கானிஸ்தானின் நட்பு நாடாக இருந்த சோவியத் யூனியன் தான் பக்ராம் ஏர்பேஸை உருவாக்கி கொடுத்தது.
1989 வரை பக்ராம் ஏர்பேஸ் சோவியத் யூனியனின் கட்டுப்பாட்டில் தான் இருந்தது. அடுத்து அமெரிக்காவின் கைகளுக்கு மாறியது. 2021 ல் அமெரிக்கா பக்ராம் ஏர்பேஸை விட்டு விலகிய பிறகு தலிபான்களின் கட்டுப்பாட்டிற்கு வந்து விட்டது.இப்பொழுது இந்த ஏர்பேஸை மீண்டும் கைப்பற்றி விட அமெரிக்கா துடிக்கிறது. சீனா பக்ராம் ஏர்பேஸை ஆட்டைய போட தலிபான்களை பணத்தினால் குளிப்பாட்டிக்கொண்டு இருக்கிறது.
இப்பொழுது இந்தியாவும் பக்ராம் ஏர்பேஸை கைப்பற்றி விட களத்தில் இறங்கி விட்டது. பக்ராம் ஏர்பேஸை கைப்பற்ற இந்தியா களம் இறங்கியதால் தான் ட்ரம்பிற்கு இந்தியா மீது கோபம் வந்து விட்டது.இந்தியாவிற்கு பக்ராம் ஏர்பேஸ் மிக முக்கியமானது. ஏன் என்றால் இந்தியா தஜிகிஸ்தானில் பர்கோர் மற்றும் அய்னி என்கிற இரண்டு நகரங்களில் ஏர்பேஸ்களை வைத்து இருக்கிறது. இது முழு அளவில் இந்தியாவின் ராணுவப் பயன்பாட்டுக்காக மட்டுமே இருக்கிறது.
வெளிநாடுகளில் இந்தியாவின் மிலிட்டரி பேஸ் உள்ள மிக முக்கியமான நாடு தஜிகிஸ்தான் தான். தஜிகிஸ்தான் பாகிஸ்தான் இடையே அனுமார் வால் மாதிரி ஆப்கானிஸ்தான் நீண்டு பாகிஸ்தானையும் தஜிகிஸ்தானையும் பிரித்து இருக்கிறது.ஆப்கானிஸ்தானின் பக்ராம் ஏர்பேஸ் சீனாவின் கைகளுக்கு சென்று விட்டால் தஜிகிஸ்தானில் உள்ள இந்தியாவின் பர்கோர் மற்றும் அய்னி ஏர்பேஸ்களுக்குசிக்கல் உண்டாகி விடும். இந்திய விமானப் படைகள் பாகிஸ்தானை தாக்க விடாமல் சீனா பக்ராமில் இருந்து தடுத்து விடும்.
ஒரு வேளை பக்ராம் ஏர்பேஸ் இந்தியாவின் கைகளுக்கு வந்து விட்டால் பாகிஸ்தானின் கதை கந்தல் தான். வடக்கே தஜிகிஸ்தான் ஏர்பேஸ், மேற்கே ஆப்கானிஸ்தான் ஏர்பேஸ்களில் இருந்து இந்திய விமானப்படை பாகிஸ்தானை அடித்து நொறுக்கி விடும்.
அதனால் பக்ராம் ஏர்பேஸை கைப்பற்ற இந்தியா அனைத்து வழிகளிலும் முயற்சித்து கொண்டு இருக்கிறது. சோவியத் யூனியன் உருவாக்கி அமெரிக்கா நவீனப்படுத்திய பக்ராம் ஏர்பேஸ் இந்தியாவிற்கு கிடைத்து விட்டால் இந்தியாவும் வல்லரசுகளின் வழியில் பயணப்பட ஆரம்பித்து விடும்.பக்ராம். இஸ்லாமிய நாட்டில் இந்து பெயர் மாதிரி தெரிகிறதே என்று யோசிக்கிறீர்களா..பக்ராம் என்றால் சமஸ்கிருதத்தில் ராமனின் தோட்டம் என்று பெயராம். அதனால் பக்ராம் இந்தியாவின் தோட்டமாக மாறுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது.