ஓணம் பண்டிகை நாடு முழுவதும் உற்சாகமாக 29.08.2023 அன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடபட்டது . இந்தநிலையில்கோவை தெற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் பெண்களோடு இணைந்து ஓணம் பண்டிகையை கொண்டாடினார். மேலும் பெண்களுடன் இணைந்து நடனம் ஆடி வாழ்த்து தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் ;
கேரள மாநிலத்தோடு எல்லையை பகிர்ந்து கொள்ளக்கூடிய மாவட்டம் என்பது மட்டுமல்ல அதிகமான மலையாளம் பேசக்கூடிய மக்கள் உள்ள மாவட்டம். தொழில்துறை மற்றும் கல்வித்துறை வளர்ச்சிக்கு மலையாள மொழி பேசக்கூடிய அந்த சமுதாயத்து மக்கள் மிக அதிகமாக பங்களித்துக் கொண்டிருக்கிறார்கள்.
தமிழக முதலமைச்சர் கூட ஓணம் பண்டிகைக்காக மலையாளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஆனால் இதே போல தீபாவளிக்கும் மாநில முதல்வர் வாழ்த்து கூறினால் அணைவருக்குமான முதல்வராக இருப்பார் என தெரிவித்தார்.திருவோணத்தை போலவே தீபாவளிக்கும் வாழ்த்து சொல்ல வேண்டும்.
கோவை மேயர் சர்ச்சை விவகாரத்தில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் சாதாரண மாணவர்களுக்கும் உரிய நியாயம் கிடைக்க வேண்டும் என கூறினார். ஊழலுக்கு எதிராக மத்திய அரசினுடைய நடவடிக்கை என்பது கட்சி சார்பற்றது.
யார் யாருக்கு எல்லாம் எதிராக ஆதாரங்கள் இருக்கிறதோ சாட்சியங்கள் இருக்கிறதோ அதை வைத்து தான் மத்திய அரசுடைய ஏஜென்சிகள் நடவடிக்கை எடுக்கிறது. ஏனவே பாரதிய ஜனதா கட்சிக்கும் மத்திய ஏஜென்சிக்கும் தொடர்பு கிடையாது என கிடையாது என கூறினார்.