என் மண் என் மக்கள் இரண்டாம் கட்ட பாதயாத்திரை மேற்கொண்டு வரும் பாஜக தலைவர் அண்ணாமலை திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் தனது பாதயாத்திரையை மேற்கொண்டார். கொடைக்கானல் முக்கிய பகுதிகளான நாயுடுபுரத்தில் தொடங்கிய பாதயாத்திரைவில்பட்டி ரோடு, கான்வென்ட் ரோடு, செவன் ரோடு, லேக் ரோடு, அண்ணாசாலை வழியாக மூஞ்சிக்கல் பகுதிக்கு வந்தடைந்தார்.
அப்போது பேசிய பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் :தமிழகத்தின் தென் பகுதிகளில் வளர்ச்சி என்பதே இல்லை. மலைகளின் இளவரசி என கொண்டாடப்படும் கொடைக்கானலில் அடிப்படை வசதிகள் கூட நிறைவேற்றாமல் இருக்கிறது . குறிப்பாக திமுக அரசு வருவதற்கு முன் கொடைக்கானலுக்கு மட்டும் ஒன்பது வாக்குறுதிகளை கொடுத்தது. கொடுத்த வாக்குறுதிகளில் ஒன்றை கூட நிறைவேற்றவில்லை.
சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா விண்கலம் அனுப்பப்பட்டுள்ளது. அதிலுள்ள முக்கியமான கருவி கொடைக்கானல் அப்சர்வேட்டியில் உருவாக்கப்பட்டது.இதுகுறித்தும் திமுக அரசு கொண்டாடவில்லை.
இங்கு 36 கிராமங்களில் மலைப்பூண்டு சாகுபடி அதிக அளவில் நடக்கிறது.
அதற்கு 2019ல் பிரதமர் மோடி புவிசார் குறியீடு பெற்று தந்தார். ஒன்பது ஆண்டுகளில் தமிழக வளர்ச்சிக்காக ரூ. 10.76 லட்சம் கோடி வழங்கியவர் பிரதமர் மோடி. அனைத்து மக்களும் பயனடைந்த நிலையில், முதல்வர் ஸ்டாலின் எதையுமே மத்திய அரசு நமக்காக செய்யவில்லை என கூறி வருகிறார்.
மத்திய அரசால் நமக்கு கிடைத்த பயன்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட்டுள்ளேன். இந்தியா வளர்ச்சி பெற பிரதமராக மோடி இருப்பது அவசியம். பொருளாதாரத்தில் பதினாறாவது இடத்தில் இருந்த இந்தியாவை ஒன்பது ஆண்டுகளில் ஐந்தாவது இடத்திற்கு கொண்டு வந்துள்ளார்.2014க்கு பிறகு சிறு, குறு வியாபாரிகளுக்கும் மத்திய அரசு கடன் வழங்கியுள்ளது.
ஊழல் செய்வதை கற்றுக் கொடுப்பவர் லாலு பிரசாத் யாதவ். விஞ்ஞான ஊழல், குடும்ப அரசியலை வெளிகாட்டுவது தி.மு.க.,இவர்கள் சேர்ந்து பிரதமர் மோடியை எதிர்க்கின்றனர்.தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர் கெட்டுள்ளது. எந்த காரணத்திற்காகவும் மம்தா பானர்ஜி, ஸ்டாலின் போன்றோர்களை மத்திய அரசுக்குள் அனுமதிக்க கூடாது.
தமிழகம் ஊழலில் சாதனை செய்யும் அரசாக மாறி உள்ளது. கடன் வாங்குவதில் தமிழகத்தை ஸ்டாலின் நம்பர் ஒன் ஆக மாற்றியுள்ளார்.மத்தியில் காங்., ஆட்சியில் எத்தனையோ குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடந்தன. பிரதமர் மோடி ஆட்சியில் எந்த அசம்பாவிதம் சம்பவங்களும் நடக்கவில்லை.தமிழகத்தில் அழிக்கப்பட வேண்டிய கட்சியாக தி.மு.க., உள்ளது.
மேலும் பேசுகையில் உதயநிதி மீதும் சேகர் பாபு மீதும் பாரபட்சம் இல்லாமல் நடவடிக்கை எடுப்போம் என காவல்துறை நேற்று கூறியது ஆனால் அந்த உயர் காவல்துறை IPS அதிகாரிகள் 3 பேர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி உள்ளனர்.
செய்திகளில் அண்ணாமலையை கைது பண்ணாமல் விட்டதால் காவல்துறை அதிகாரிகளை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றியுள்ளார்கள் என செய்திகள் வருகிறது.
அதனால் நான் சொல்வது என்னவென்றால் மு.க ஸ்டாலின் அவர்களுக்கு தைரியம் இருந்தால் என்னை தொட்டு பார்க்கட்டும் எனக்கு நெஞ்சில் துணிவும் நேர்மையும் இருப்பதால் தான் உங்களை எதிர்த்து நீங்கள் அடிக்கும் கொள்ளைகளை பற்றி பேசிக்கொண்டு உள்ளேன்..