தமிழக அரசியலில் ஒரு சிலதினகளுக்கு முன்பு பரபரப்பு காணப்பட்டு அதிமுக பாஜக கூட்டணி முறிந்தது.அதன் பின் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை டெல்லி சென்று பாஜக முத்த தலைவர்கள் அமித்ஷா,நட்டா உள்ளிட்டோர்களை சந்தித்தார் அண்ணாமலையின் பாதயாத்திரைக்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு இருப்பதை கட்சி மேலிடமும், பிரதமர் மோடியும் நன்றாக அறிந்துள்ளனர் என்கின்றனர். பா.ஜ., தமிழகத்தில் வளர இந்த யாத்திரை உதவும் என்பதும் இவர்களது கருத்து.
இந்தநிலையில் பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது.
அந்த கூட்டத்தில் முக்கியமாக அண்ணாமலை பேசியது தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் விரைவில் பாஜக சார்பில் தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம் செய்ய உள்ளதாகவும் 10 நாட்களுக்குள் தொகுதி வாரியாக வேட்பாளர்களை அடையாளம் கண்டு, தேர்தல் பணிகளை மேற்கொள்ளும் வகையில் பொறுப்பாளர்களை நியமிக்க உள்ளதாகவும் தெரிவிதுள்ளார்.
தொகுதி வாரியாக சிறப்பாக செயல்படும் பாஜக நிர்வாகிகள் குறித்த பட்டியல் சேகரிக்கப்பட்டு தேசிய தலைமையிடம் (முத்த தலைவர்கள் அமித்ஷா,நட்டா )வழங்கப்பட உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார்.
இந்த திட்டமானது பாஜக மூத்த தலைவரான உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் முழு ஆதரவோடு அவர் அளித்த ஆலோசனையின் பெயரிலேயே தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செயல்படுவதாக பாஜக மூத்த நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.